சிறப்புக் களம்

பட்டினி கிடந்தாலும் இளைக்காத சுறா

பட்டினி கிடந்தாலும் இளைக்காத சுறா

webteam

மீன்களில் அதிக கேட்கும் திறன் கொண்டது சுறா மீன்கள். சுறா இனங்களில் மொத்தம் 440 வகை இருக்கின்றன. அவற்றில் 30 வகையான சுறாக்கள் தான் மனிதர்களை தாக்கும் வல்லமை கொண்டவை.

சுறாக்களின் வகைகளுக்கு ஏற்ப வளர்ச்சியிலும் சில சில மாறுபாடுகளை கொண்டிருக்கும். சில சுறாக்கள் 15 மீட்டர் நீளம் வளரும். சில சுறாக்கள் 12 மீட்டர் நீளம் வளரும். பொதுவாக சுறாக்கள் அனைத்தும் நான்கு வரிசை பற்களை கொண்டது. ஒரு பல் விழுந்தாலும் ஏழு எட்டு நாட்களில் மீண்டும் அதே இடத்தில் பல் முளைத்துவிடும். சுறாக்களுக்கு கூர்மையான பார்வைத் திறன் இல்லை என்றாலும் மந்தமான வெளிச்சத்தில் பார்வை திறன் கொண்டது. இவை 100 குட்டிகள் கூட போடும். குட்டி சுறாக்கள் பிறந்தது முதல்தானே இரை தேடிக்கொள்ளும்.

இரை தேடி போகும் போது பெரிய சுறாக்களிடம் மாட்டிக் கொண்டால் அவை அதற்கே இரையாகி விடும். தாய் சுறாக்கள் இது போன்ற குட்டி சுறாக்களை ஒரு போதும் உட்கொள்வதில்லை. சுறாக்கள் மாதக்கணக்கில் பட்டினி இருந்தால் கூட அவை உடல் இளைத்து போகாத வண்ணம் அதன் உடம்பில் இருக்கும் கொழுப்பு எண்ணெய் அவற்றை பாதுகாக்கும். அழிந்த வரும் உயிரினங்கள் பட்டியலில் சுறாக்களும் இருப்பதால் அவற்றை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.