சிறப்புக் களம்

செல்ஃபியும் ஒரு கலை வடிவம்தான் ..!

செல்ஃபியும் ஒரு கலை வடிவம்தான் ..!

webteam

செல்போன்களைக் கொண்டு செல்ஃபி எடுப்பதை வெறும் பொழுதுபோக்கு என்று இனியும் கருதவேண்டாம். ஏனெனில், செல்ஃபிக்களை கலை வடிவமாக அங்கீகரித்திருக்கிறது லண்டனில் கண்காட்சி நடத்தும் அமைப்பு.

செல்போன்கள் மூலம் செஃல்பிக்களை எடுப்பதற்கு இனி யாரும் தயங்கவேண்டியதில்லை. செல்ஃபி மோகம் என்றும் யாரும் இனிப் பேசக் கூடாது. செல்ஃபி என்பது ஒருவகையான கலை வடிவம். மற்ற புகைப்படங்களைக் காட்டிலும் செல்ஃபிக்களுக்கு பல சிறப்புகள் இருக்கிறது என்கிறது அந்த அமைப்பு.

லண்டனில் கண்காட்சி ஒன்றுக்கு அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பாரம்பரிய புகைப்படங்களுடன், செஃல்பி புகைப்படங்களும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்படுவதால், செல்ஃபிக்கள் மற்ற புகைப்படங்களில் இருந்து மாறுபடுவதாக கண்காட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். ஆங்கில அகராதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட செல்ஃபி என்ற சொல்லுக்கு இத்தகைய கண்காட்சிகள் கவுரவத்தைச் சேர்க்கின்றன.