சிறப்புக் களம்

2 ஆயிரம் பேர் புடைசூழ பைக்கில் வலம் வந்த ‘சர்கார்’ விஜய்: நியு அப்டேஸ்

2 ஆயிரம் பேர் புடைசூழ பைக்கில் வலம் வந்த ‘சர்கார்’ விஜய்: நியு அப்டேஸ்

webteam

விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்புகள் குறித்த பல சுவாரஸ்யமான செய்திகள் வெளியாகி உள்ளன. 

‘சர்கார்’ ஆடியோ விழா நடந்த நாளில் இருந்து விஜய் தான் டாக் ஆஃப் த டவுன். அரசியல்வாதிகளில் இருந்து அரசியல் அல்லாதவர்கள் வரை அவரை பற்றி கருத்து கூறி வருகின்றனர். அதற்கு சரியான உதாரணம் அஞ்சனா. காம்பியராக இருந்து செலிபிரைட்டியாக உயர்ந்தவர். அவரை ஏன் நீங்கள் ‘சர்கார்’ விழாவை தொகுத்து வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் நெட்டீசன்கள். அதற்கு அவர், ‘குழந்தை இருப்பதால் விழாவில் பங்கேற்க முடியவில்லை. என் தோழி தியாவிற்கு வாழ்த்துகள்’ என கூறியிருக்கிறார். அஞ்சனா வெறித்தனமான விஜய் ரசிகை. அவர் இருந்திருந்தால் சிறப்பாக தொகுத்தளித்திருப்பார் என்பது சிலரது நம்பிக்கை. 

இந்நிலையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கார்த்திக் நாகராஜன் ‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். ஒருநாள் இரவு மெளண்ட் ரோட்டில் வைத்து ஒரு பைக் ரைட் சீனை எடுத்திருக்கிறார்கள். அப்போது மாலையில் இருந்தே விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு வர உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. ஆகவே அங்கே அதிக ஹைப் உருவாகியுள்ளது. 

ஆனால் இரவுதான் விஜய் வந்துள்ளார். அவரது நேரப்படிதான் அவர் வந்துள்ளார். வந்தவர் சென்னையில் பல இளைஞர்களுடன் சேர்ந்து பைக்கில் வலம் வருவதை போல ஒரு சீன் எடுத்திருக்கிறார்கள். அந்த மேப் படி யார் யார் எந்தெந்த பக்கம் போக வேண்டும் என முன்பே வழி போட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பயணித்த யோகி பாபு ஒரு கட்டத்தில் வழி புரியாமல் தடுமாறி வேறு திசையில் போய்விட்டிருக்கிறார். அப்புறம் அவரது தலைமுடியை  தூரத்தில் இருந்தே அடையாளம் கண்டுபிடித்து அழைத்து வந்திருக்கிறது படக்குழு. 

விஜய்யின் நெருங்கிய நண்பனாக படம் முழுக்க வருகிறார் யோகி பாபு. ஆகவே அவரது திரை ஆதிக்கம் விஜய்யுடன் சரி பங்காக இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜய்யுடன் படப்பிடிப்பில் இருந்த போதுதான் யோகி பாபுவின் ‘கோலமாவு கோகிலா’ பாடல் வெளியாகி உள்ளது. அதனை தனது மொபைல் போனில் விஜய்க்கு போட்டுக் காட்டி இருக்கிறார் யோகி. அவரும் நயன்தாராவும் இணைந்து நடித்திருந்த காட்சிகளை விஜய் பார்த்துவிட்டு மிகவும் ரசித்திருக்கிறார். மேலும் அவரது வளர்ச்சியை கண்டு பாராட்டியும் இருக்கிறார். 

இந்த பைக் சீன் தான் படத்தில் ஃபயர் சீன் என்கிறார் கார்த்திக் நாகராஜன். இவருடன் நெருங்கி விஜய் நடித்திருக்கும் காட்சிகளில் பல அரசியல் வசனங்கள் நெருப்பாக தெறித்துள்ளது என அவரே கூறியிருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் விஜய்யின் நடிப்பு மூன்று துப்பாக்கி அளவுக்கு உச்சத்தை தொட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இளைஞர்களுடன் விஜய் சேர்ந்து பைக்கில் பயணித்த காட்சி படத்தில் எப்படியும் 15 நிமிடங்களுக்கு மேல் வரும் என்றும் தெரிய வந்துள்ளது. 

முதலில் மெளண்ட் ரோட்டிலும், பிறகு பின்னி மில்லில் இரவு நேரத்தில் ஹேவி லைட்டிங் வசதிகளுடனும் அதே காட்சியின் தொடர்ச்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த லைட்டிங் சீனில் விஜய்யின் பைக் ரைட் காட்சி ரசிகர்களை பஞ்சர் பண்ணும் என்கிறார் இவர். ஏறக்குறைய 2 ஆயிரம் இளைஞர்கள் இடம்பெற்றிருக்கும் இக்காட்சி படத்தின் முதுகெலும்பு காட்சி என்றும் அவர் வாக்குமூலம் தந்திருக்கிறார். இந்தக் காட்சிகளுக்கான சில படங்கள் தான் ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தக் காட்சியில் விஜய் மிக நீண்ட வசனத்தை பேசுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சியை ஒரு பிசிறு இல்லாமல் பேசி முடித்திருக்கிறார் விஜய். ஆனால் சக நடிகர்கள் கொஞ்சம் கோட்டைவிட மீண்டும் ரீ டேக் போய் உள்ளது இந்தக் காட்சி. அப்போதும் அசராமல் அதே உஷ்ணத்தோடு பேசி நடித்து தந்துள்ளார் விஜய். இந்தக் காட்சி ரீ டேக் ஆன போது முருகதாஸ் ஒரு யுக்தியை பயன்படுத்தி இருக்கிறார். அதாவது சொதப்பாமல் நடிக்கும் சக நடிகர்களுக்கு ஆன் த ஸ்பார்ட்டில் பரிசு எனக் கூறியிருக்கிறார். அதன்படி ஒரு பாட்டி அந்தக் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். உடனே அவரை அழைத்து அங்கேயே பரிசு கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார் இயக்குநர். மேலும் அந்தப் பாட்டிக்கு ஒரு குளோஸ் அப் காட்சியும் படத்தில் வைத்திருக்கிறார். 

‘தலைவா’ படத்திற்குப் பிறகு அரசியல் பஞ்ச் வசனங்களை அடக்கியே வாசித்து வந்த விஜய் இந்தப் படத்தை முழு நீள அரசியல் வசனங்களால் கொட்டி நிரப்பி இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் எஸ்.எம்.எசில் ஆங்கிலத்தை சுறுக்கெழுத்தில் பயன்படுத்தி வருகிறார்கள் இல்லையா? அதை வைத்து ஒருபாடலை எழுதி இருக்கிறார்கள்.‘ஒஎம்ஜி பொண்ணு’(OMG – Oh My God) என்ற அந்தப் பாடலில் 22 வார்த்தைகளை இதே போன்ற பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது Happy birthday என்பதை HBD போடுகிறார்கள் இல்லையா அதைதான் பாடலின் கான்செப்ட்டாக பயன்படுத்தி உள்ளது படக்குழு.