சிறப்புக் களம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் - உலக நாடுகள் சொல்வது என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா போர் - உலக நாடுகள் சொல்வது என்ன?

கலிலுல்லா

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் உலக நாடுகள் என்ன கருத்துக்களை முடிவுகளை எடுத்து உள்ளார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுத்து இருப்பதற்கு வெள்ளை மாளிகை தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா தற்போது செய்து வரும் காரியங்களுக்கும் உயிரிழப்புகளுக்கு மற்றும் பிற அனைத்து விஷயங்களுக்கும் உலக மக்களிடம் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை கொண்டுவரப்படும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யா மீது மிகப்பெரிய பொருளாதார தடைகளை விதிக்க தங்கள் நாடு முடிவுசெய்துள்ளது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

தங்களது நட்பு நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார், புட்டின் ஒரு சர்வாதிகாரி. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவருவது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

ரஷ்யா மேற்கொண்டு உக்ரைனுக்கு உள்நுழையவும் தாக்குதல் நடத்துவதையும் நிறுத்த வேண்டும் என ஜெர்மனி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜெர்மனியும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளது. நாங்கள் உக்ரைனுடன் உதவியாக இருக்கிறோம். ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டுமெ ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என தனது நிலைப்பாட்டை வெளியிட்டள்ளது இஸ்ரேல்.

ரஷ்யா உக்ரைன் இடையே ஏற்பட்டு வருவது சிக்கலான வரலாற்றுத் தருணம் என்றும், இதனால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து தான் வருத்தப்படுவதாக இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக் கருத்து கூறியுள்ளார்.

மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல் அனைத்து நாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பினர் என்ற முறையில் நேபாள அரசு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் ஐநா சபையின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமை என்பது கடைபிடிக்கப்பட வேண்டும் என நேபால் கருத்து கூறியுள்ளது. அநியாய மற்றும் சட்டவிரோத போரை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு துருக்கி வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

உக்ரைன்னுக்கு பிரான்ஸ் ஆதரவு என்றும் எல்லா வகையிலும் உக்ரைன்னுக்கு உதவும் என அறிவித்துள்ள தோடு ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்கவும் முடிவெடுத்துள்ளது. அதேபோல நேட்டோ அமைப்பின் மாநாட்டினை உடனடியாக கூட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கையால் கணக்கில் இல்லாத அளவிற்கு மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும் நேட்டோ அமைப்பு கூறியுள்ளது. உக்ரைன் நாட்டுக்குள் தங்களது படைகளை அனுப்பும் எந்த திட்டம் தற்பொழுது வரை இல்லை என நேட்டோ அமைப்பின் தலைவர் ஸ்டோலன் பெர்க் தகவல் கூறினார் அதேவேளையில் நட்பு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தங்களது படைகள் குவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இத்தாலி பிரதமர் டிராகி கூறும் பொழுது எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் அண்டை நாடான லித்துவேனியா தனது நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ள நிலையில் மால்டோவா நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்வோம் என கூறியுள்ளது.