minister Roja
minister Roja pt desk
சிறப்புக் களம்

”ஆபாச CD சர்ச்சை: அதுக்கு பேசுனாரு.. இந்த மோசமான பேச்சை ரஜினி சார் ஏன் கண்டிக்கல?” - ரோஜா ஆவேசம்

Kaleel Rahman

கேள்வி: நிறைய தைரியமாக அரசியல் மற்றும் பத்திரிகையாளர்களை எதிர் கொண்டுள்ள நீங்கள், சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் கண்கலங்கி பேட்டி கொடுத்தீங்க. எதிர்க்கட்சியின் இந்தப் போக்கு, எதை உங்களை காயப்படுத்தியதாக நினைக்கிறீங்க?

minister roja

பதில்: இன்று ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு ஸ்கில் டெவலப்மெண்ட் ஊழலில் சிறை சென்ற பிறகு அவங்களுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக நினைக்கிறேன். என்ன பேசுறோம். யாரை பேசுறோம் விவஸ்தை இல்லாமல் ரொம்ப கேவலமா, கீழ்த்தரமா என்னை பத்தி அவங்க பேசியிருக்காங்க. எனக்கு ரொம்ப கஷ்டமாறிருச்சு.

1991-ல் நான் செம்பருத்தி படத்துல நடுச்சிருக்கேன். இதுவரைக்கும் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு நல்ல பெயர்வாங்கி இந்த இடத்துக்கு நான் வந்திருக்கேன். ஒரு பெண்ணான நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்க கேரக்டர் மேல ஒரு குண்டைத் தூக்கி போட்டிருக்காங்க. நான் ப்ளூ பிலிம்ல நடுச்சிருக்கிறேனாம். விபச்சாரம் பண்ணியிருப்பது போல் கேட்க முடியாத அளவுக்கு கேவலமாக பேசியிருக்காங்க.

chandrababu naidu

இதற்காக நான் அவருடன் சண்டையிடுவது பெரிய விசயம் கிடையாது. நான் எப்படியாவது அவரை உள்ளே வைப்பேன். ஜனாதிபதியை கூட நான் சந்திக்கப் போறேன். ஏன்னா இதுக்கு ஒரு முடிவு வரணும். ஒரு பெண்ணை எது வேண்டுமானாலும் பேசலாம் என்று ஒரு ஆம்பள நினைக்கக் கூடாது. யாரும் எந்த பெண்ணைப் பற்றி பேசுவதற்கும் உரிமை இல்லை.

கேள்வி: சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்து, அதுவும் பெண்ணாக இருந்தால் அவங்களோட பார்வையே மோசமாக இருக்கிறது என்று சொல்லவாரீங்களா?

arrest

பதில்: நார்மலா ஒரு பெண்ணாக இருந்தால் இந்த மாதிரி ஆண்களுக்கு ஒரு சீப்பாக இருக்கிறது. கண்டிப்பா இவன் வீட்ல இருக்குற பொண்டாட்டியோ, பொண்ணோ, தங்கச்சியோ, மருமகளை கூட மதிப்பாங்கன்னு நான் நினைக்கல.

கேள்வி: சந்திரபாபு நாயுடு கட்சியினர் உங்களை கடத்துற அளவுக்கு சித்ரவதை செய்ததாக சொல்றீங்க. ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் சந்திரபாபு நாயுடு ரொம்ப நேர்மையான மனிதர். அவர், பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்றாரே. அதை எப்படி புரிந்து கொள்வது?

ரோஜா, ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடு

பதில்: என்டிஆர்-க்கு நூற்றாண்டு விழா கொண்டாடிய போதுதான் நான் முதல் முதலாக ரஜினி சாருக்கு எதிராக பேசினேன். எங்க எல்லாத்துக்கும் ரஜினி சாரை ரொம்ப பிடிக்கும். அவங்ககூட நடிச்சிருக்கோம். ஆனால் பேச வேண்டிய சூழ்நிலை வந்தது. ஏன்னா, என்டிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்துட்டு, என்டிஆர் பற்றி பேசாமா சந்திரபாபு நாயுடு நல்லவரு. அவருக்கு ஓட்டுபோட்டு மறுபடியும் முதலமைச்சரா ஆக்கணும்னு சொல்லி அவரு பேசுனாரு.

உங்களுக்கு ஆந்திராவில் ஒரு மரியாதை இருக்கு. ஒரு தப்பான ஆள, ஒரு திருடனை நல்லவன்னு சொல்லிட்டு அவனுக்கு ஓட்டுப்போட சொல்றியே உங்களுக்கு இருக்குற மதிப்பு போயிரும் அப்படி பேசக்கூடாதுன்னு நான் முதலில் குரல் கொடுத்தேன். மேலும் பல கேள்விகளுக்கான பதில்களை வீடியோவில் காணலாம்.