சிறப்புக் களம்

நிவர் புயல் டாப் நியூஸ்: 1402.90 மி.மீ மழை பதிவு... நிவர் புயலால் உயர்ந்த கடல் அலை

நிவர் புயல் டாப் நியூஸ்: 1402.90 மி.மீ மழை பதிவு... நிவர் புயலால் உயர்ந்த கடல் அலை

Veeramani

நிவர் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய செய்தி தொகுப்பு.

* நிவர் புயலால் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் சென்னையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை 6 மணி முதல்  1402.90 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 127.53 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

* செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தம்பரம் மற்றும் அடையார் ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களை எச்சரிக்குமாறு மத்திய நீர் ஆணையம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சென்னை பெருவெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதில் இந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

* வழக்கமாக ஏற்படும் கடல் அலை புயல் காரணமாக சுமார் 1.5 மீட்டர் உயரம் அதிகமாக புதுச்சேரி மற்றும் சென்னை கடற்கரைகளில் உயர்ந்து வருகின்றன. இதனால் கடற்கரை பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற ஐஎம்டி இயக்குநர் ஜெனரல் டாக்டர் எம் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.

* மெரினா கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் என்னூர் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை ஆகியவற்றை புயல் காரணமாக சென்னை நகர காவல்துறை மூடியுள்ளது. நிவர் சூறாவளியைக் கருத்தில் கொண்டு இந்த சாலைகளில் எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எட்டு ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிலைப்பாட்டில் உள்ளன என்று பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். நிவாரண முகாம்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்க முடியும் என்றும், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை விரைவில் அருகிலுள்ள முகாமுக்கு அணுகுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார்.

* நிவர் சூறாவளி படிப்படியாக தீவிரமடைகிறது. இது மரங்களை வேரோடு பிடுங்குவது, தகரம் மேய்ந்த வீடுகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வாழை மற்றும் நெல் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிக பாதிப்பு இருக்கும் என்று IMD டி.ஜி மிருத்யுஞ்சய் மோகபத்ரா கூறியுள்ளார்.

* புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசுவாமி அவர்களை பார்வையிட்ட பின் அவர்கள் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.