சிறப்புக் களம்

ஐயையோ..! ஆக்ரோஷமா வருதாம் ஆபத்தான எரிகல்

webteam

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி மிகப்பெரிய எரிகல் ஒன்று மோதும் நிலையில் வருவதாகவும் இதனால் பூமி பேராபத்தில் இருப்பதாகவும் நாசா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள ஹலீயகாலா எரிமலை பகுதியில் யான்-ஸ்பார்ஸ் 1 என்ற சக்தி வாய்ந்த டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. இந்த டெலஸ்கோப்பானது கடந்த மாதம் 25 ஆம் தேதி பதிவு செய்த அபூர்வ புகைப்படம் ஒன்று நாசா விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதில் வெளிவந்துள்ள புகைபடத்தில் மிகப் பெரிய அளவிலான எரிகல் ஒன்று பூமிக்கு அருகே வர இருப்பதாகவும் அது பூமியின் மீது மோதும் அபாயத்தில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த எரிகல், 26 அடி அகலம் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பூமிக்கு அருகே 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் தொலைவில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிகல் பூமிக்கு அருகில் வரும்போதுதான் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவாகத் தெரியவரும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.