நங்கநல்லூர் மெட்ரோ கூகுள்
சிறப்புக் களம்

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலைய பெயர் மாற்றம்!

நேற்று வரை நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையமாக அறியப்பட்ட மெட்ரோ ரயில் நிலையமானது இன்று முதல் OTA - நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Jayashree A

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தை "OTA - நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம்" என்று பெயர் மாற்றம்.

நேற்று வரை நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையமாக அறியப்பட்ட மெட்ரோ ரயில் நிலையமானது இன்று முதல் OTA - நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் (officer training academy) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

”22.10.2024 தேதியிட்ட அரசு ஆணை - G.O. Ms. No.151 இன் படி நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தை OTA - Naganallur Road Metro என பெயர் மாற்றம் செய்வதை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. OTA - நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் CMRL திட்டத்தின் ப்ளூ லைன் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் (OTA) முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில், ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் இந்திய ராணுவத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க அஞ்சலியாக இருக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான உயர் சக்திக் குழுவின் (HPC) 26 வது கூட்டத்தில், அதன் பரிசீலனைகள் மற்றும் பரிந்துரைகளுக்காக, இராணுவ அதிகாரிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், குறிப்பாக தலைமைத் தளபதியின் சமீபத்திய கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளிவந்ததும், பல்வேறு தரப்பினரும் “இது அமரன் படத்தின் வெளிப்பாடு” என்றும் ”பொது பணம் வீணடிக்கப்படுகிறது” என்றும் தனது கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.