சிறப்புக் களம்

ஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் அப்படியே....! ஆஸியை கலாய்க்கும் 'மீம்ஸ்'

ஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் அப்படியே....! ஆஸியை கலாய்க்கும் 'மீம்ஸ்'


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாதனை
வெற்றி பெற்றது, இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியை சமூக வலைத்தளங்களில் பலரும்
கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இல்லாததால்தான் இந்தியாவால் வெற்றி பெற முடிந்தது
என்று ஓர் தரப்பினரும்.

இந்திய அணி வலுவாகத்தான் இருக்கிறது ஸ்மித், வார்னர் இருந்திருந்தாலும் இந்தியா வெற்றிப்பெற்று இருக்கும் என மற்றொரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் வாதிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் பவுலர்களைஎளிதாக ஆட்டமிழக்க இந்திய அணியின் பவுலர்களால் முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அடிலெய்டில் நடந்து வந்தது.


முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது
முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன் எடுத்தது. புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி 323 ரன் முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை
தொடங்கியது.

நான்காம் நாளான நேற்று அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள்
கடைசி நாளான இன்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும்  323 ரன் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அந்த அணியால் 291 ரன்கள்
மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. ஆனால்
எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்று ஆஸி வீரர்கள் கடுமையாக போராடினர்.

சமூக வலைத்தளங்களில் ஸ்மித்,வார்னர் இல்லாமை குறித்து அதிகளவிலான மீம்ஸ்கள் வரத் தொடங்கி இருக்கிறது. எவ்வளவு சீரியசான விஷயம் என்றாலும்வழக்கம்போல் மீம் போட்டு கலாய்த்துவிட்டனர் மீம் கிரியேட்டர்கள். இதில் இந்தியாவில் இருந்துக்கொண்டு ஆஸி அணிக்கு கொடி பிடிப்பவர்களை "ஆஸி சொம்பு" என்ன நகையாடி இருக்கின்றனர்.


அதேபோல செத்துப்போன ஆஸி டீமை ஜெயிப்பதெல்லாம் ஒரு பெருமையா என்ற வகையிலும் சில மீம்ஸ்கள் அமைந்துள்ளது.
எனினும் பெரும்பாலான மீம்ஸ்கள் இந்திய கிரிக்கெட் அணியை கொண்டாடி இருக்கிறது. மிக முக்கியமாக டெஸ்ட்
போட்டிகளில் அதிக வெற்றிக்கொண்ட கேப்டன் என்ற வகையில் கோலிக்கும் மீம்களை உருவாக்குவதை தவறவிடவில்லை.