தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இ-ரெஜிஸ்டர் செய்வது எப்படி என்பதை இந்தக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு வெளியே செல்லவும் இ-பதிவு முறை கட்டாயமாகிறது.
கொரோனா 2-ஆவது அலையை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கை சிலர் கடைபிடிக்க தவறியதால் அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
அதன்படி திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு, மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்தது.
http:/eregister.tnega.org என்ற இணையதளத்தில் பயண விவரங்களை கொடுத்து இ - ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
அதற்கான வழிமுறைகளை இந்தக்கட்டுரையில் காணலாம்.
நீங்கள் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவராயின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
http:/eregister.tnega.org - கூகுள் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
உங்கள் இ- மெயிலை உள்ளீடு செய்யவும்.
பின்னர் கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அடுத்தக்கட்டத்தில் தட்டச்சு செய்து, send OTP என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
தொடர்ந்து உங்கள் இ - மெயிலுக்கு ஆறு இலக்க ஓடிபி எண் வந்தடையும்.
அந்த ஆறு இலக்க எண்ணை ஒடிபி கட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்கள் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
தொடர்ந்து உங்கள் பயணவிவரங்களை கொடுக்க வேண்டிய பட்டியல் வரும். அதில் உங்களது தகவல்களை கொடுத்து பயணப்பதிவை செய்து கொள்ளலாம்.
நீங்கள் மாவட்டத்திற்கு உள்ளே பயணத்தை மேற்கொள்பவராக இருப்பவரானால் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
முதலில் உங்களது மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.
பின்பு கட்டத்தில் உள்ள எண்ணை அருகில் உள்ள கட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை, பதிவு செய்ய வேண்டிய கட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
உங்கள் பயணத்தேர்வு கார், ரயில் என்றால் அதற்கு ஏற்ற தேர்வையும், தொழில் நிறுவனம் சார்ந்த பயணம் என்றால் அதற்கேற்ற பயணத்தேர்வாக இருக்கலாம்.
கார் வழியான பயணத்திற்கு கீழே கொடுக்கப்பட்ட விவரப்பட்டியலில் உங்களது பயணத்தகல்வல்களை கொடுத்து இ - ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
ரயில் மூலம் பயணம் செய்பவர்கள் என்றால் நீங்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டுள்ள விவரபட்டியல்களில் உங்களது விவரங்களை பதிவு செய்து இ -ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
விமானப்பயணத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் கீழ்காணும் விவரங்களை கொடுத்து இ - பதிவு செய்யலாம்.
நீங்கள் கடந்த 7 நாட்களுக்குள் வேறொரு நாட்டிலிருந்து நீங்கள் இந்தியா வந்திருந்தால் நீங்கள் சர்வதேச வருகையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தொழில் நிறுவனங்களுக்கான வாகனப்பயணம்
மாநிலங்களுக்கு இடையேயான பயணம் என்றால் கீழ்காணும் விவரங்களை பதிவு செய்து இ - பதிவு பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டிற்குள் என்றால் கீழ்காணும் விவரங்களை பதிவு செய்து இ - பதிவு பெற்றுக்கொள்ளலாம்.