சிறப்புக் களம்

என் வாழ்க்கையே எனது அறிவுரை: மகாத்மாவின் பொன்மொழிகள்!

என் வாழ்க்கையே எனது அறிவுரை: மகாத்மாவின் பொன்மொழிகள்!

webteam

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 149வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 

மகாத்மாவின் பொன்மொழிகள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பது காந்தியை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை. அதில் இருந்து சில பொன்மொழிகள்.

  • என் வாழ்க்கையே எனது அறிவுரை
  • எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உயித்திருக்கிறது
  • நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம். 
  • அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை
  • எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை.
  • பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு. 
  • அகிம்சை என்பது இதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் தொடர்பு கிடையாது. 
  • குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.
  • பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம்
  • முதலில் உங்களை உதாசீனப்படுத்துவார்கள், பின்னர் உங்களைப் பார்த்து நகைப்பார்கள், பின்னர் உங்களோடு சண்டையிடுவார்கள். பின்னர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.