container house
container house pt desk
சிறப்புக் களம்

Ready to occupy: குறைந்த செலவில் குறையில்லாத Container House!

webteam

நம்மளோட வீட்டை, ஒரு இண்டஸ்டிரியில உருவாக்கி அப்படியே கொண்டு வந்த வச்சா எப்படி இருக்கும்? இதெல்லாம் சாத்தியமான்னு தானே யோசிக்கிறீங்க? இதெல்லாம் கண்டிப்பாக சாத்தியம்தான். இதை கார்கோ டெக்சர் என்று சொல்வார்கள். அதாவது, ஷிப்பிங் கண்டெய்னரைக் கொண்டு வீடு கட்டும் முறை. இந்த தொகுப்பில் குற்றாலம் பழைய அருவி பக்கத்தில் அப்படி கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டை பற்றிதான் பார்க்கப்போறோம்.

dining hall

ஷிப்பிங் கண்டெய்னர் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு

இந்த வீட்டை கட்ட மொத்தம் 3 கண்டெய்னர் பயன்படுத்தி இருக்காங்க. அதுல 2 கண்டெய்னர் தரைத்தளத்துல இருக்கு. ஒரு கண்டெய்னர் முதல் தளமாக இருக்கு. இந்த வீட்டுக்கு பவுண்டேஷன் எதுவும் பண்ணல. காரணம், கண்டெய்னர் ஹவுஸ்-க்கு பவுண்டேஷன் தேவைப்படாது. ஆனா, மனையின் உயரத்திற்கு தகுந்தாற்போல் 8 பில்லர் மட்டும் போட்டிருக்காங்க. ஆர்மி கிரீன் கலர்தான் இந்த வீட்டோட வெளிப்புறத்துக்கு பயன்படுத்தி இருக்காங்க. அடுத்ததா இந்த வீட்டோட கார் பார்க்கிங் ஏரியா. இதோட தரைத்தளத்துக்கு பார்க்கிங் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க.

வீட்டு உரிமையாளர் டாக்டர் மம்தா ராவ் என்ன சொல்கிறார்?

“இந்த ஏரியா எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால, வாங்கியிருக்கோம். இங்க இருக்கப்போ, இயற்கைக்கு ரொம்ப கிட்ட இருப்பதா உணர்றோம். இந்த இடத்தில் உள்ள மண்ணை பாதிக்காமல் நாம தங்குறதுக்கு ஒரு வீடு வேண்டுமென்று நினைத்தபோது இதுமாதிரியான ஒரு கண்டெய்னர் வீட்டை கட்டலாம்னு என்னோட நண்பர்கள் சொன்னாங்க.

இந்த கான்செப்ட்டே Ready to occupy -ஆக இருக்க வேண்டும். வெயிட்டிங் பீரியட் ரொம்ப இருக்கக் கூடாது. கன்ஸ்ட்ரக்ஷன் செய்தால் ஒவ்வொரு ஸ்டேஜ்லேயும் வந்து பார்க்க வேண்டும். ‘இதை அப்படி செய்ங்க, அதை இப்படி செய்ங்க’ன்னு சொல்லணும். தொழிலாளர்கள் பிரச்னைகளும் இருக்க வேண்டாமென்றால் இந்த வீடு ஒரு நல்ல ஆப்ஷன் தான்” என்றார் வீட்டு உரிமையாளர் டாக்டர் மம்தா ராவ்.

house owner

கண்டெய்னரின் அகலத்தை அதிகமாக்கி கட்டப்பட்ட வீடு

அடுத்ததா இந்த வீட்டோட பெரிய ஹால் மற்றும் ஓப்பன் கிச்சன். இந்த ஹால் முழுவதுமே ஒரு சிங்கிள் கண்டெய்னர்தான். இதோட நீளம் 40 அடி. கண்டெய்னரோட அகலம் பொதுவாக 8 அடிதான் இருக்கும். ஆனால், கண்டெய்னரை Modify பண்ணி 12 அடி அகலத்துக்கு வாங்கியிருக்காங்க. உயரம் 9 அடி. ஒரு வீட்டோட டிசைனை பொருத்தே கண்டெய்னரை பண்ணுவாங்க. அதற்கு ஏற்றது போலதான் இதையும் பண்ணியிருக்காங்க.

Open Modular Kitchen with Dining hall!

இந்த வீட்டோட கிச்சன், ஒரு மாடுலர் கிச்சன்தான். சி செக்ஷன் அமைப்பில் உள்ள இந்த கிச்சனில் டைனிங் டேபிள் வச்சிருக்காங்க. இந்த கிச்சனோட ஸ்லாப்க்கு பிளாக் கேலக்ஸி கிரானைட் பயன்படுத்தி இருக்காங்க. பக்கவாட்டு சுவற்றுக்கு, ரொம்ப அழகான மொராக்கன் ஸ்டைல் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. ஒரு வீட்டுக்குள்ள கலர்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த வீட்டையும் அழகாக்குவது அந்த கலர்ஸ் தான். இந்த வீட்டுக்குள்ள வெள்ளை, கருப்பு மற்றும் க்ரே என 3 கலர்களை அதிகமாக பயன்படுத்தி இருக்காங்க.

hall

அடுத்ததா இந்த வீட்டோட மாஸ்டர் பெட்ரூம். இந்த மாஸ்டர் பெட்ரூமை பொருத்தவரைக்கும் இதோட அகலம் 12 அடி. இந்த பெட்ரூம் அகலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கண்டெய்னர் அகலத்தை 8 முதல் 12 அடியாக மாற்றியிருக்காங்க.

French Window:

இந்த வீட்டோட ஹாலையும் ஓப்பன் கிச்சனையும் பிரிப்பதற்கு French Window வச்சிருக்காங்க. அடுத்ததா இந்த வீட்டின் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு ஃப்ரேம்க்கு சி செக்ஷன் ஸ்டீல் பயன்படுத்தி இருக்காங்க. கைப்பிடிக்கு மைல்டு ஸ்டீல் பயன்படுத்தி இருக்காங்க. படிக்கு செக்கர்டு ஸ்டீல பயன்படுத்தி இருக்காங்க. செக்கர்டு ஸ்டீல் லைட்வெயிட் மெட்டீரியல்தான். ஆனா, மிக கடினமாக மெட்டீரில். இந்த மெட்டீரியலை அதிகமா ரயிலில் பயன்படுத்தி இருப்பாங்க! நீங்களும் பார்த்திருக்கலாம்.

Outdoor Tiles:

இந்த வீட்டோட மாடியில் இருக்கும் தரைத்தளத்துக்கு அவுட்டோர் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இது பாக்குறதுக்கே ரொம்ப அழகா இருக்கு. கண்டெய்னருக்கு மேல தரமாக எம்எஸ் ஸ்டீல்ல க்ரிட் போல பார்ம் பண்ணி, அதுக்கு மேல கான்கிரீட் கலவை போட்டு, அதுக்கு மேல நல்ல அடர்த்தியான பைபர் சிமெண்ட் போர்டு போட்டிருக்காங்க. அதுக்கு மேலதான் அவட்டோர் டைல்ஸ் போட்டிருக்காங்க.

bed room

Outdoor SitOut

இந்த வீட்டோட Outdoor SitOut. இது கண்டெய்னரில் இருந்து தனியாக இருக்கும் பகுதி. இதோட தரைத்தளத்துக்கும் அவுட்டோர் டைல்ஸ் போட்டிருக்காங்க. இந்த டைல்ஸ் நல்லா க்ரிப்பாக இருக்கும். இந்த ஏரியாவுல சாரல் மழை அதிகமாக பெய்யும். அதனாலதான் வழுக்காமல் இருப்பதற்காக அவுட்டோர் டைல்ஸ் போட்டிருக்காங்க. இதுல இருந்து உள்ளே வந்தா, ஒரு ஷிட்அவுட் இருக்கு. இந்த ஒட்டுமொத்த ஷிட்அவுட்டுக்கும் ஒரு சிங்கிள் கண்டெய்னர் பயன்படுத்தி இருக்காங்க. அடுத்ததா இந்த வீட்டோட முன்கதவுக்கு மெம்ரைன் டோர்ஸ் போட்டிருக்காங்க. இது ஸ்ட்ராங்கானது. அதனால அதிகமாக க்ராக் விழாது. (அதனாலதான் வீட்டோட முன்கதவுக்கு பயன்படுத்தி இருக்காங்க)

Private Sit Out Area

அடுத்ததா இந்த வீட்டோட Private Sit Out Area. இந்த இடத்த கண்டெய்னர் உயரத்துக்கு உயரமாக ஆக்கியிருக்காங்க. இதோட ஃபவுண்டேஷனுக்கு பிளைன் சிமெண்ட் கான்கிரீட் போட்டிருக்காங்க. இதோட தரைத்தளத்துக்கும் அவுட்டோர் டைல்ஸ் போட்டிருக்காங்க. ஜிஐ பைப்ல ப்ரேம் செய்து அதுக்கு மேல சீட் போட்டு சீலிங் பண்ணியிருக்காங்க. இந்த வீடு முழுவதுமே தரைத்தளத்துக்கு க்ரே கலர், வெர்ட்டிபைட் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இது பாக்குறதுக்கு ரொம்பவே நல்லா இருக்கு.

outdoor tiles

தெர்மல் இன்சுலேசன் (Thermal Insulation) ஏன் பண்ண வேண்டும்?

இதுபோன்ற கண்டெய்னர் வீட்டுக்கு தெர்மல் இன்சுலேசன் பண்ணியே ஆக வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் கண்டிப்பா அதுல குடியிருக்கவே முடியாது. இதுபோன்ற வீடுகளை கட்டும்போது முன்னமே சரியாக ப்ளான் பண்ணி கட்ட வேண்டும். ஏனெனில் வீட்டை கட்டிய பிறகு அதை ஆல்டர் செய்வது மிகவும் கடினம்.

1,100 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மொத்த செலவு 24 லட்சமாம்!

இந்த வீட்டை விஷூவலாக பார்க்க, இந்த வீடியோவை பாருங்க!

இப்ப பார்த்த வீடு கண்டிப்பாக பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். இதுபோன்ற மேலும் பல வித்தியாசமான வீடுகளின் சிறப்பை வரும் நாட்களில பார்க்கலாம்.