சிறப்புக் களம்

மேலாடை அணியமுடியாத காலமும் இருந்ததுதானே! நீதிபதியின் கருத்து பெண்களுக்கு அயர்ச்சியை தராதா?

webteam

சில நாட்களுக்கு முன்பு ”ஆபாச உடையணியும் பெண்ணிடம் பாலியல் சீண்டல்கள் குற்றமாகாது” எனக் கோழிக்கோடு நீதிமன்றம், கேரள எழுத்தாளர் மீதான பாலியல் வழக்கில், குற்றம் சுமத்திய பெண் பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் உடை அணிந்திருந்ததால் சட்டப் பிரிவு 354ஏ, குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பொருந்தாது என்று கூறி அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது.

நீதித்துறையில் சீர்திருத்தம் தேவை. சில சமயங்களில், தீர்ப்பில் ஆணாதிக்க சிந்தனை வெளிப்படுவது மூலம் நாட்டில் உள்ள பெண்களின் அவலத்தை புரிந்துகொள்ள முடியும் எனப் பல கருத்துக்கள் இருந்தாலும் கூட, ’ ‘சில’ நீதிபதிகள் இதுபோன்ற பாலியல் வழக்கில் ஆணாதிக்க தீர்ப்பு கொடுப்பதும் அதற்கு விளக்கங்கள் கொடுப்பதும் இது முதல் முறை அல்ல.. அவர்கள் பாலியல் வழக்குகளில், குற்றத்தின் நோக்கத்தைப் பார்க்காமல், பெண்ணின் ஆடையை நீதிமான்களே குற்றம் சொல்வது பெண்களுக்கான நீதிகள் மீது அயர்ச்சியைத் தருகிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக ஹிஜாப் குறித்த உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கு வாதத்தின் போது, ‘’நம்ம அரசியல் சாசனத்தின் யார் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதற்கு உரிமை இருக்கிறது. அதற்கு மேல் ஹிஜாப்  அணிவது அந்த பெண்களின் விருப்பம் அதில் என்ன தவறு இருக்கிறது “ என்று மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் வாதாடும் போது குறுக்கிட்ட நீதிபதி ஹேமந்த் குப்தா , ‘’Right to Dress” என்பது அடிப்படை உரிமையில் இருக்கிறது என்னும் போது, ‘’ Right to Undress” என்பது அடிப்படை உரிமை தானே? என்றார் நீதிபதி.  நீதிபதி ஹேமந்த் குப்தா இந்த வார்த்தை தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் தேவதத் காமத், ‘’ கல்வி நிலையங்களில் யாரும் ‘’ Right to Undress” குறித்துப் பேசவில்லை. ஏற்கனவே அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் ஒரு ஆடையாகத் தான் ஹிஜாப் அணிவதைக் கோருகிறோம் என்றார்.

‘’Right to Dress” என்று பேசும் போது ’ Right to Undress” என்று ஒரு வாதத்தை முன்வைப்பது ஒரு நீதிபதி என்னும் போது, அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இந்த வாதத்தின் போது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கூட கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிகிறார்கள் என்று சுட்டிக்காட்டும் போது, அதற்குப் பதிலளித்த நீதிபதி, ‘’ நமது நாட்டை மேலை நாடுகளுடன் ஒப்பிட முடியாது. நாம் மிகவும் புராதனம் தேசம். “ என்றுள்ளார்.

நாம் புராதனம் மிகுந்த நாட்டில் 80 ஆண்டுகளுக்கு முன்பு தாய்மார்கள் மேலாடை அணியவில்லை. அணியவும் கூடாது என்பது தானே மரபாக இருந்தது. பின்னர் நாகரீக வளர்ச்சியில் உடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது தானே? இப்படி தானே கற்கால மனிதன் தற்கால மனிதனான்?!

‘’Right to Dress” என்று சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து விவாதிக்கும் போது இதுபோன்ற நீதிமன்ற கருத்துகள் சிறுபான்மையினரின் இருப்புக்கு அச்சறுத்தலாக அமையாதா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகிறார்கள்.

எழுத்து – கே. அபிநயா