சிறப்புக் களம்

"லா லா லேண்ட்" திரைப்படத்துக்கு தங்கத்தில் சிலை

"லா லா லேண்ட்" திரைப்படத்துக்கு தங்கத்தில் சிலை

webteam

அதிகமான ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் லா லா லேண்ட் திரைப்படத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக, லண்டனில் தங்கச் சிலை நிறுவப்பட்டுள்ளது.‌

ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் நிற்பதே அமெரிக்கத் திரைப்படக் கலைஞர்களுக்கு கனவு. ஒரேயொரு முறை ஆஸ்கர் விருது பெற்றால்கூட, வாழ்நாள் முழுவதும் பெருமை கிடைக்கும். ஏதாவது ஒரு பிரிவில் ஒருவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டால் கூட, அதைக் குறிப்பிட்டே‌ பின்னாளில் அவர் அழைக்கப்படுவார். அத்தகைய பெருமைக்குரிய ஆஸ்கர் விருதுகளுக்காக பல பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது லா லா லேண்ட் திரைப்படம். இந்த திரைப்படம் 13 பிரிவுகளில் 14 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லா லா லேண்ட் திரைப்படத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை சுமார் 8 அடி உயரத்தில், படத்தின் முக்கியக் காட்சியை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 கிலோ தங்கத்தைக் கொண்டு, 360 மணி நேரம் செலவிட்டு இந்தச் சிலையை உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி முடியும்வரை இ‌ந்தச் சிலை பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இசை மூலமாக கதை சொல்லும் “லா லா லேண்ட்” ஆஸ்கர்களைக் குவிக்குமா..? என்பது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.