திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளது. ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டுள்ளது
சிறுநீரக தொற்று காரணமாகவும் வயதின் காரணமாகவும் கருணாநிதி உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சலுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து 4 மருத்துவர்கள் கொண்ட குழு கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளது. இதனையெடுத்து கருணாநிதியின் உடல்நிலை சற்று மோசமான நிலையில் உள்ளதால் அவரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்து அவரது வீட்டில் ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலை தனது வீட்டுக்கு சென்ற ஸ்டாலின் தற்போது திடீரென கோபாலபுரம் வந்தார். அவரை அடுத்து கனிமொழி, துரைமுருகன், அழகிரி ஆகியோரும் கோபாலபுரம் வந்துள்ளனர்