சிறப்புக் களம்

அன்றே சொன்னார் நீதிபதி கர்ணன் – ஆதங்கப்படும் சமூக வலைத்தளவாசிகள்

அன்றே சொன்னார் நீதிபதி கர்ணன் – ஆதங்கப்படும் சமூக வலைத்தளவாசிகள்

webteam

பத்திரிகையாளர்களை சந்தித்து வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள் நீதிபதிகள். பத்திரிகையாளர்களை சந்தித்தது மேட்டரில்லை , பேசிய விஷயங்களே ஹிட் .உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் சரியில்லை, நீதிமன்ற மாண்பு ஏறக்குறைய பாதி கெட்டு விட்டது என்றெல்லாம் பகீர் கிளப்பியிருக்கிறார்கள். ஆனால், ’நீங்க என்ன கெளப்புறது, அன்னைக்கே சொன்னாருல எங்க நீதிபதி கர்ணன்’ என்று பாய்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது டி.என்.பி.எஸ்.சி வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி வரை தடாலடியாக சண்டை போட்டவர். முடியாது சாமி என அவரை கொல்கத்தா நீதிமன்றத்துக்கு பணி மாற்றம் செய்தது கொலிஜியம். ஆனால் அங்கு சென்றவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக களமிறங்கினார். கடைசியில் அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா சிறையில் ஆறு மாதம் சிறைவாசமே மிச்சமானது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் , தலைமை நீதிபதிக்கு எதிராகவும் நிர்வாகத்துக்கு எதிராகவும் களமிறங்கியுள்ள சூழலில், ’நீதிபதியாக இருந்த கர்ணன் சொன்னதை கேட்ருக்கலாம்ல’ என கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர் சமூக வலைத்தளத்தினர். ’குற்றச்சாட்டு கூறினால் ஜெயிலுக்கு அனுப்புவீங்க, இப்ப நீங்களே புலம்புறீங்களே’ என விமர்சிக்கவும் தயங்கவில்லை சமுக வலைத்தளத்தினர்.