சிறப்புக் களம்

“பைடனின் 50 ஆண்டுகால காத்திருப்பு”: ஜோபைடன் பற்றிய 10 தகவல்கள்

“பைடனின் 50 ஆண்டுகால காத்திருப்பு”: ஜோபைடன் பற்றிய 10 தகவல்கள்

Veeramani

கடந்த சில நாட்களாக உலகமெல்லாம் உச்சரிக்கப்படும் பெயர் ஜோ பைடன். தற்போதைய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்க்கு எதிராக, 2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்.

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை, ஜோ பிடன் வீழ்த்துவது கிட்டத்திட்ட உறுதியாகிவிட்டது. இந்த சூழலில் ஜோ பைடன் பற்றி அறிந்துகொள்ளவேண்டிய 10 தகவல்கள்:

  1. ஜோசப் ராபினெட் ஜோ பைடன் 1942 நவம்பர் 20 ஆம் தேதி பென்சில்வேனியா, ஸ்க்ராண்டன் பகுதியில் பிறந்தவர், தற்போது அவருக்கு வயது 77.
  2. ஜோபைடன் ஆரம்பம் முதலே மிகவும் துணிச்சலானவராக இருந்தாலும், திக்குவாய் பிரச்சினை காரணமாக பள்ளிபருவத்தில் பல அவமானங்களை சந்தித்தார். அதன்பின் தைரியமாக, அவமானங்களை தாங்கி அவர் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளராக மாறினார்
  3. டெலவேயர் பல்கலைக்கழகம் மற்றும் சிராகஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த ஜோ பைடன், 1969இல் வழக்கறிஞரானார்.
  4. 1972ஆம் ஆண்டில் தனது 29 வயதில் டெலவேயரில் இருந்து அமெரிக்காவின் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பைடன், இதன்மூலமாக அமெரிக்க வரலாற்றின் ஐந்தாவது இளைய வயது மேலவை உறுப்பினர் என்ற பெருமையை பெற்றார்.
  5. 1972 இல் தொடங்கி 2008 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து அமெரிக்க மேலவை உறுப்பினராக பதவி வகித்தவர் இவர், அப்போது நான்காவது மூத்த மேலவை உறுப்பினராகவும் பைடன் இருந்தார்.
  1. 1966 ஆண்டு நெய்லியா ஹண்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பைடன், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது. 1972 இல் செனட் உறுப்பினராக பைடன் தேர்வான சில மாதங்களிலேயே நடந்த பெரும் விபத்தில் அவரது மனைவி மற்றும் பெண் குழந்தை உயிரிழந்தனர். மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் மிகவும் மனமுடைந்த பைடன், தனது மகன்களை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார்.
  2. 1977 ஆம் ஆண்டு ஜில் ஜாகோப்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்தார் பைடன், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
  3. 1980, 1984, மற்றும் 1988 ஆம் ஆண்டுகளின் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ள நபராக இருந்தவர், ஆனால் ஏனோ இதற்கான முயற்சிகள் அவருக்கு கைகூடவில்லை.
  4. 2008 ஆம் ஆண்டிலும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்தார், ஆனால் அதில் ஒபாமா வெற்றிபெற்றார். பின்னர் 2009 முதல் 2017 ஆம் ஆண்டுவரை பராக் ஒபாமா அதிபராக பணியாற்றியபோது, இவர் அமெரிக்க துணை அதிபராக இருந்தார். ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமான நபராக இவர் அறியப்படுகிறார்.
  5. 2015 ஆம் ஆண்டு பைடனுடைய மகன் திடீர் மரணமடைந்தார், இது அவரை உலுக்கியெடுத்தது, அதன் காரணமாக 2016 ஆம் ஆண்டுக்கான அதிபர் வேட்பாளருக்கு தான் போட்டியிடவில்லை என அறிவித்தார்.