சிறப்புக் களம்

ட்விஸ்ட் வைக்கும் ஐபிஎல் 2018; யார் உள்ளே யார் வெளியே..?

ட்விஸ்ட் வைக்கும் ஐபிஎல் 2018; யார் உள்ளே யார் வெளியே..?

webteam

2018 ஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டி இருகிறது. தொடர் தொடங்குவதற்கு முன் எந்த அணி  ஃப்ளே ஆஃப்க்குள் வரும் என  ரசிகர்கள் முன்கூட்டியே கணித்து இருக்கலாம். ஆனால் ஐபிஎல் பொருத்தவரை அப்படியான கணிப்புகள் எல்லாம் பலமுறை  பொய்த்துதான் போய் உள்ளது. அது தான் ஐபிஎல்லின் தனித்துவம்! ஐபிஎல் தொடரில் 50 லீக் போட்டி முடிந்து விட்ட நிலையில் இன்னும் ஒரு சில போட்டிகள் மட்டுமே மீதமிருக்கிறது. முதல் இரண்டு இடங்களுக்கு கிட்டத்தட்ட யார்? யார் என்பது முடிவாகிவிட்டது. ஆனால் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கு மிகப் பெரிய யுத்தமே நடந்து வருகிறது. 

கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டியில் வென்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைவகிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டியில் 6 போட்டியில் வென்று 12 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தை வகிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டியில் விளையாடி 6 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தை வகிக்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டியில் வென்று 12 புள்ளிகளுடன் 6வது இடத்தை வகிக்கிறது. ராயல்ஸ் சேலர்ஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டியில் விளையாடி அவற்றில் 5 போட்டியில் வென்று 10 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தை வகிக்கிறது. 

இனிமேல் நடைபெற உள்ள ஒருசில போட்டிகள்தான் வாழ்வா? சாவா? போட்டியாக சில அணிகளுக்கு அமைய உள்ளது. குறிப்பாக இன்று நடைபெறும் பெங்களூரு- சன் ரைசர்ஸ் போட்டியின் முடிவு பெங்களூரு அணியின் வாய்ப்பை தீர்மானித்து விடும். இன்றைய போட்டியில் ஒருவேளை பெங்களூரு தோற்கும் பட்சத்தில் அந்த அணியின் ஃப்ளே ஆஃப் கனவு பறிபோகும். வெற்றி பெறும் பட்சத்தில் ஃப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கலாம். அதுமட்டுமல்லாமல் அந்த அணிக்கு இன்னும் ஒரு போட்டி இருகிறது. 19ம் தேதி ராஜஸ்தான் அணியுடன் நடக்கும் போட்டியிலும் வென்று அதிக ரன்ரேட் பெற்றால் ஒருவேளை ஃப்ளே ஆஃப் வாய்ப்பு அந்த அணிக்கு இருகிறது.

18ம் தேதி நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ்  அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் தன்னுடைய மோசமான ஆட்டத்தால் முதல் ஆளாக மூட்டையைக் கட்டியது டெல்லி டேர்டெவில்ஸ்தான். ஏற்கெனவே ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட சென்னை, டெல்லி அணியை வென்று புள்ளிப் பட்டியளில் முதல் இடம் பிடிக்க முயற்சிக்கலாம். மற்றபடி இந்தப் போட்டி பற்றிபேச ஒன்றும் இல்லை. 19ம் தேதி நடக்கும் போட்டியில் ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. 12 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இந்தப் போட்டி பதில் சொல்லிவிடும். பெங்களூரு அணியை வென்று ரன்ரேட் அடிப்படையிலும் முன்னிலை வகித்தால் ராஜஸ்தான் அணிக்காக ஃப்ளே ஆஃப் வாய்ப்பு இருகிறது.

அதே 19ம் தேதி நடக்கும் மற்றொரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வென்றால் மட்டும் போதும். எளிதாக ஃப்ளே ஆஃப் வாய்ப்பை எட்டிப் பிடிக்கும். மாறாக தோற்றாலும்கூட மோசமான தோல்வியாக அது இல்லாவிட்டால்  ஃப்ளே ஆஃப் ரேஸ்சில் இருக்கும் இதர அணிகள் குறைந்த ரன்ரேட்டில்  தோற்கும் போது, அது கொல்கத்தா அணிக்கு பிரகாசமான வாய்ப்பாக அமைந்துவிடும். ஐதராபாத் அணி பொருத்தவரை புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், இந்தப் போட்டி அவர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. எனினும் முதல் இடத்தை தக்க வைக்கும் முயற்சியில் இந்தப் போட்டியில் வெற்றிப் பெற முயற்சிக்கும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

20ம் தேதி மும்பை இந்தியன்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை அணிக்கு உண்மையாகவே வாழ்வா? சாவா? போட்டிதான். இதில் மும்பை அணி பெரிய வெற்றியை பெற்று, 19ம் தேதி நடக்கும் போட்டியில் கொல்கத்தா அணியும், அன்று மாலையே நடக்கும் போட்டியில் பஞ்சாப் அணி தோற்கும் பட்சத்தில் மும்பை அணிக்கான ஃப்ளே ஆஃப் வாய்ப்பை உருவாக்கும். டெல்லி டேர்டெவில்ஸ் பொருத்தவரை து இது சம்பர்தாய போட்டிதான்.

20ம் தேதி நடக்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களம் காணுகின்றன. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது ஆறாவது இடத்திற்கு வந்து நிற்கிறது. அதும் ரன்ரேட்டும் கூட இப்போதைய சூழலில் மைனஸ்சில்தான் இருகிறது. ஃப்ளே ஆஃப் வாய்ப்பை எட்ட வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி பெரிய வெற்றியைப் பெற வேண்டிய சுழலில் இருகிறது. அதே சமயம்  கொல்கத்தா அணியும், மும்பை அணியும் தோற்றால் பஞ்சாப் அணி ஃப்ளே ஆஃப்பில் விளையாடும் அணி என்ற சிறப்பை எட்டிப் பிடிக்கும். ஆம், எந்தெந்த அணி ஃப்ளே ஆஃப்க்குள் நுழையும், எந்த அணி கோப்பையை தட்டிப் பறிக்கும் என்ற ஐபிஎல்  ரசிகர்களில் எதிர்பார்ப்புக்கான கிளைமக்ஸ் தெரிய இன்னும் ஒரு சில நாட்கள் வரை காத்திருப்பதை தவிர வேறு வழிகள் இல்லை.