House
House pt desk
சிறப்புக் களம்

‘காற்றே என் வாசல் வருவாய்..!’ பழைய டெக்னிக்கில் ஒரு புது வீடு! இவ்ளோ கம்மி விலையில் இப்படியொரு வீடா?

Kaleel Rahman

முன்னெல்லாம் கிராமங்களில் மண்சார்ந்த வீடுகள் அதிகம் இருந்தன. அதனால் கான்கிரீட் வீடுகள் தனியாக தெரிந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இப்போதெல்லாம் மண் சார்ந்த வீடுகள் தான் தனியே தெரிகின்றன. அதிலும் மண் சார்ந்த பழைய டெக்னிகளை பயன்படுத்தி, புதுமையான விஷயங்களை அதில் புகுத்தி கட்டப்படும் வீடுகள் கூடுதல் தனித்துவம் பெற்றுவிடுகிறது.

அப்படி சென்னை அருகே கட்டப்பட்டுள்ள மண் மணம் வீசும் ஒரு அழகான வீட்டை பற்றிதான் இங்கே பார்க்கப் போறோம்...
House

கார்டன் மற்றும் கார் பார்க்கிங் வசதி:

2,080 சதுரடியில் ரூ.55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அழகான வீட்டோட நுழைவு வாயிலை கல்சுவர் வைத்து இரண்டாக பிரிச்சிருக்காங்க. இதில், ஒருபக்கத்தை கார்டனாவும் இன்னொரு பக்கத்தை கார் பார்க்கிங் ஏரியாவாவும் பயன்படுத்துறாங்க.

Veedu

கார் பார்க்கிங் பகுதியின் தரைத் தளத்திற்கு ‘கோட்டாகல்’ பயன்படுத்தி இருக்காங்க. Main Door-க்கு முன்னாடி சின்னதா ஒரு திண்ணை அமைப்பு இருக்கு. அங்குள்ள சின்ன சிட்அவுட் தரைத் தளத்திற்கு கிரானைட் பயன்படுத்தி இருக்காங்க.

கதவு மட்டும்தான் புதுசு; மற்ற எல்லாமே..!

இந்த வீட்டோட முன் கதவு மட்டும் தான் புது கதவு. அதையும் பழமையான பொருட்கள், ஐடியாவோடு அழகா செஞ்சிருக்காங்க. அதனால பர்மா தேக்கில் செய்யப்பட்டுள்ள இந்த கதவு பார்ப்பதற்கு ரீ-யூஸ்டு கதவு போல தெரியுது. அடுத்ததா, இந்த வீட்டோட ஹால் பகுதி. 19-க்கு 16 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாலின் தரைத்தளதிற்கு நேச்சுரல் லைம் ஸ்டோன் பயன்படுத்தி இருக்காங்க. இதற்கு காரணம் என்னென்னா, இந்த தரைத்தளத்தை பயன்படுத்த பயன்படுத்த... அது தரமாகவும் ஷைனிங்காகவும் இருக்குமாம்.

Veedu

செட்டிநாட்டு மரத்தூண்கள்!

அடுத்ததாக வீட்டின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக கார்னர் கோட்ரியாத் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோர்டியாத்தை ஹைலைட் பண்ண, ஒரு பக்கம் முழுவதும் சிமெண்ட் பயன்படுத்தி கல்லால் ஆன சுவரை எழுப்பியிருக்காங்க. அதன் நடுவே ஒரு புத்தர் சிலை வச்சிருக்காங்க. இந்த கோர்டியாத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மரத்தூண்களும் செட்டிநாடு கட்டடக் கலையில் பயன்படுத்தப்பட்ட தூண்களாம்!

Veedu

அது இரண்டையும் மறுபயன்பாடு செய்து இப்போ பயன்படுத்தி இருக்காங்க. இதேபோல இங்கு தொங்கவிடப்பட்டுள்ள ஊஞ்சலும் செட்டிநாடு கட்டடக் கலையில் இருந்த மறு பயன்பாடு செய்யப்பட்டது தானாம். இந்த ஊஞ்சலால் இந்த வீடு மிகவும் அழகாக காட்சியளிக்கிறதுனு சொல்லலாம்.

காற்றே என் வாசல் வருவாய்...!

தண்ணீர் தட்டுப்பாடின்றி, வெளிச்சமாகவும், காற்றோட்டத்துடனும் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் கிழக்கு நோக்கி பூஜை ரூம் இருக்கு. இதோட கதவு கண்ணைக்கவரும் படி அவ்வளவு அழகு! இவைமட்டுமில்லாம, வீடு முழுக்க அந்த காலத்து வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் பல இடங்களில் செரியால் பெயிண்ட்டிங் செஞ்சிருக்காங்க. அதுவும் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லா இருக்கு. பழசையும் புதுசையும் பயன்படுத்தி இநத வீடு கட்டப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கு அழகாக இருக்கு.

Veedu

கச்சிதமான கிச்சன்

இந்த வீட்ல சிம்னி வச்சி மாடுலர் கிச்சன் தான். அங்க வெர்டிபைட் டைல்ஸ் மூலம் ஸ்லாப் போட்டிருக்காங்க. சமைக்கும்போது, ரொம்ப கம்ஃபர்டபிள் ஃபீலை இது கொடுக்குமாம்! அதேபோல் கிச்சன் சைடு சுவர் பார்ப்பதற்கு வித்தியாசமா மொராக்கன் ஸ்டைலில் மேட் ஃபினிஸ் வெட்டிபைட் டைல்ஸ் ஒட்டியிருக்காங்க. அதேமாதிரி இந்த கிச்சன்ல கார்னர்லதான் ஜன்னல் வச்சிருக்காங்க.

Veedu

இது அழகுக்காக மட்டுமின்றி காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. கிச்சனுக்கு பக்கத்துல ஒரே கல்லால் ஆன வாஷ்பேசின் வச்சிருக்காங்க. இதுல கோவில்ல அபிஷேக தண்ணீர் வரும் டிசைன்ல பைப் அமைச்சிருக்காங்க(!)

வாவ் சீலிங்!

வீட்டோட முதல் தளத்தில் உள்ள சீலிங்ல லீஃப் இன்ப்ரஷன் பண்ணியிருக்காங்க. இது பார்ப்பற்கு செம லுக்கா இருந்துச்சு! பில்லர் பவுண்டேஷன் போடப்பட்ட இந்த வீட்டோட சுவர் முழுவதுமே வயர் கட் பிரிக்ஸ் பயன்படுத்திதான் எழுப்பியிருக்காங்க.

Veedu

இந்த செங்கல் முழுவதும் கேஜிஎப்-ல இருந்து வாங்கியிருக்காங்கலாம். ஏன்னா அங்கதான் விலையும் குறைவு தரமாகவும் இருக்குமாம். பில்லர் பவுண்டேஷன் என்பதால, இந்த வீட்ல எங்கேயுமே லிண்டல் பீம் அமைக்கல.

ஸ்டைலிஷ் பால்கனி!

அடுத்ததா முதல் தளத்துல இருக்குற பெட்ரூம்ல பிரன்ஸ் ஸ்டைலில் ஜூலியட் பால்கனி அமச்சிருக்காங்க. இது பாக்குறதுக்கு கொள்ளை அழகு! சீலிங் முழுவதும் பில்லர் ஸ்லாப் சீலிங் பயன்படுத்தி இருக்காங்க. இதனால 30 சதவீதம் கம்பியோட மற்றும் சிமெண்ட்டோட பயன்பாடு குறையும் என்று சொல்றாங்க.

பழசையும் புதுசையும் இணைத்து அழகாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டோட தகவல் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறோம். மேலும் ஒரு வீட்டோட சிறப்போடு மீண்டும் சந்திப்போம்.