சிறப்புக் களம்

"உலகுக்கே வழிகாட்டி" - தஞ்சாவூரிலிருந்து உலக நாடுகளுக்கு திசைக்காட்டி பலகை

"உலகுக்கே வழிகாட்டி" - தஞ்சாவூரிலிருந்து உலக நாடுகளுக்கு திசைக்காட்டி பலகை

Veeramani

தஞ்சாவூரிலிருந்து உலக நாடுகளுக்கு செல்ல வழிகாட்டி பலகை சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலைகளில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு செல்ல வழிகாட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருப்பதைப் போல், தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் உலக நாடுகளுக்கு செல்ல வழிகாட்டி பலகை வைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உறந்தைராயன் குடிகாடு எனும் கிராமத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த வழிகாட்டி பலகை காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் மற்றும் தேநீர் நிலையம் நடத்தி வரும் மாமல்லன் என்பவர், கடைக்கு வரும் மக்கள் பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்க இந்த ஏற்பாடு செய்ததாக கூறினார். எந்தெந்த நாடுகள் எந்தெந்த திசையில், எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி பலகையானது தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான், தாய்லாந்து, சவுதி அரேபியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 28 நாடுகளின் திசை மற்றும் தொலைவை அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் ஒன்று கூடும் இந்தப் பகுதியை மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொழுது போக்கு இருக்கைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கடையில் வைத்திருக்கிறார்.