Kim Cotton
Kim Cotton pt desk
சிறப்புக் களம்

தொடங்கியது புதிய அத்தியாயம்! ஆண்கள் டி-20 கிரிக்கெட்டில் கள நடுவராக பணியாற்றிய முதல் பெண்!

Kaleel Rahman

இலங்கை கிரிக்கெட் அணியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில், டுனெடினில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி நடைபெற்றது. ஆடவர் பங்கேற்ற இந்த போட்டியில், கிம் காட்டன் (48) என்பவர் முதல் பெண் கள நடுவராக பணியாற்றினார்.

48 வயதான கிம் காட்டன், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 24 மகளிர் ஒருநாள் போட்டிகளில் கள நடுவராக பணியாற்றியுள்ளார். இதுதவிர, களம் மற்றும் தொலைக்காட்சி நடுவர் என 54 மகளிர் டி-20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஹாமில்டனில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது காட்டன், முதன்முதலில் டிவி நடுவராக ஆடவர் விளையாடும் போட்டியில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Kim Cotton

2020, 2022 மற்றும் 2023-ல் நடைபெற்ற இறுதிப் போட்டிகள் உட்பட மூன்று மகளிர் டி-20 உலகக் கோப்பைகள் மற்றும் ஒரு ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றிலும் காட்டன் நடுவராகப் பணியாற்றியுள்ளார். தற்போது முதன்முறையாக ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் நடுவராக தன்னுடைய புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவின் Claire Polosak 2021-22-ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்டின் போது நான்காவது நடுவராக பணியாற்றி ஆடவர் டெஸ்ட் போட்டியில் முதல் பெண் போட்டி அதிகாரி ஆனார்.