veedu
veedu pt desk
சிறப்புக் களம்

வெளியே ஹாட்... உள்ளே கூல்... - மண் சார்ந்த வீட்டின் மகிமை

Kaleel Rahman

“மண்சார்ந்த வீடு கட்டும்போது முதலில் எதிர்ப்பு இருந்தது... ஆனாலும்...”

– கட்டட வடிவமைப்பாளர் ஜெகதீசன் சொல்வதென்ன?

“புதிய தலைமுறைல வர்ற வீடு நிகழ்ச்சிய ரெகுலரா பாத்துக்கிட்டு இருப்பேன். மண் சார்ந்த வீடுகள் மீது எனக்கு ரொம்பவே ஆர்வமாக இருந்தது. அதுவும் மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மண் சார்ந்த வீடுகள் கட்டவே ரொம்ப ஆர்வமாக இருந்தது. அதனால எங்க ஏரியால இருக்குற மண்ணை எடுத்து நாங்க இந்த வீட்ட கட்ட ஆரம்பிச்சோம். நாங்க மண் வீடு கட்டணும்னு முடிவு பண்ணிட்டு வீட்ல சொன்னப்ப வீட்ல யாரும் ஒத்துக்கல. ‘எல்லாரும் ஒரு பக்கம் போய்கிட்டு இருக்கும்போது, நீ மண்ண வச்சு என்னடா பண்ண போற’னு கேட்டாங்க.

jegadeesan

இன்னும் சிலரெல்லாம் ‘மண் வீட்டை பராமரிக்க முடியாது. இப்ப மண் வீட்டையெல்லாம் இடிச்சுட்டு கான்கிரீட் வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க. நீ என்னடா’ன்னு ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்கு முடிஞ்ச அளவுக்கு புரிய வச்சேன். ஆனாலும் அவங்க நம்புற மாதிரி இல்ல. மழை பெய்தா, சுவர் இடிஞ்சு போயிரும்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா நிறைய மழை பெய்துட்டு இருக்கும்போதுதான் கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் நடந்துக்கிட்டே இருந்தது. அதுக்குப்பிறகுதான் நம்ப ஆரம்பிச்சாங்க. கட்டி முடிச்சதுக்கு அப்புறம் வெளியே இருக்குற வெப்பத்தை விட வீட்டுக்குள்ள வெப்பம் குறைவாதான் இருக்கும். இப்ப வீட்ல எல்லாம் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெளியிலிருந்து வந்தவங்களும் பாராட்டிட்டு போனாங்க”

மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட Gate!

இந்த வீட்டோட ஃப்ரெண்ட் கேட்டை தயாரிக்க, மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி இருக்காங்க. அதேபோல பிளம்பிங் ஒர்க்-க்கு பயன்படுத்துற பைப், அதுக்குள்ள பழைய பைக்கோட செயின் பிராக்கெட் ஆகியவற்றையும் பயன்படுத்தி அழகான கதவை போட்டிருக்காங்க. இதனால் இந்த வீட்டோட முகப்பே புதுமையா இருக்கு.

steps

அழகுக்கு அழகு சேர்க்கும் மரத் தூண்கள்

அடுத்ததா இந்த வீட்டோட முன் ஏரியால இருக்கிற தரைத்தளத்துக்கு செங்கல் பயன்படுத்தி இருக்காங்க. இந்த செங்கலை இவங்க வெளிய வாங்கலயாம்... இவங்களே செஞ்சது! இது மண் சார்ந்த ஒரு கல் தான். மண் சார்ந்த கல்லில் இருக்குற ஒரே பிரச்னை என்னன்னா, அதை கார்னர்ல பயன்படுத்த முடியாது. அதனால கார்னர்ல சிமெண்ட் போட்டிருக்காங்க. இந்த வீட்டோட என்ட்ரன்ஸ்ல ரெண்டு தூண் இருக்கு. இந்த ரெண்டு தூணுமே மறுபயன்பாடு செய்யப்பட்ட பொருட்களால் ஆனவை தான். இது போன்ற மறு பயன்பாடு செய்யப்பட்ட தூண்களை நாம் அதிகமா பாத்துட்டு வர்றோம். இதுபோன்ற தூண்களை செய்வது இப்போ கடினமானது. ஆனால், பார்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கு என்ற எண்ணம் தான் மனசுல வருது.

தேக்கு மரத்தால் செய்யப்பட்ட முன் கதவு!

அதுக்கப்புறமா இந்த வீட்டோட முன் கதவு. இந்த கதவுமே மறு பயன்பாடு செய்யப்பட்ட கதவு தான். வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே நம்ம வரவேற்றது பெரிய ஹால். இந்த ஹாலுக்குள் நுழைஞ்சதுமே நம்மளை ரொம்ப கவர்ந்தது, Walled safe மேற்கூரை. இதை அமைப்பது ஈஸியான வேலை கிடையாது. ஏன்னா இதை கொண்டு வர நார்மலான முறையை பயன்படுத்த முடியாது. இதுக்கு சில விஷயங்களை எக்ஸ்ட்ரா பண்ணனும். உதாரணத்துக்கு சொல்லனும்னா இந்த வீட்டுக்கு கருங்கல்லால் லோட் பேரிங் பவுண்டேஷன் (load bearing foundation) போட்டிருக்காங்க.

dining

அதுக்கு மேல பிலின்த் பீம் (Plinth Beam) போட்டிருக்காங்க அதுக்கு மேல லிண்டல் பீம் (lintel beam) போட்டிருக்காங்க. பொதுவா கதவு ஜன்னலுக்கு மேல ஒரு பீம் போடுவாங்க. அதுதான் லிண்டல் பீம். ஆனா, இந்த மாதிரி ஒரு வால்ட் சேஃப் பண்ணும் போது அதுக்கு ஸ்பெஷல் ஸ்பிஞ்சர் பீம் (stringer beam) போட்டிருக்காங்க. அதோடு டை ராடு (Die Steel Rod) ஒன்றும் கொடுத்திருக்காங்க. இந்த டை ராடு இருபுறமும் இருக்கும் ஸ்பிஞ்சர் பீமையும் நல்லா இழுத்துப்பிடிச்சு வச்சிருக்கு.

மண்சார்ந்த வீடுகளை திட்டமிட்டு கட்டினால் விரைவாக கட்ட முடியும்!

முன்பே சொன்னதுபோல, இந்த வீட்டை கட்ட செங்கல் வெளியே இருந்து வாங்கவே இல்ல. செங்கலுக்கு பதிலா எர்த் பிளாக்ஸ் தான் பயன்படுத்தி இருக்காங்க இந்த ஏரியால கிடைக்கிற செம்மண்ணுடன் எம்-சாண்ட் மற்றும் ஐந்து சதவீதம் சிமெண்ட் கலந்து ஹேண்ட் பிரஷ் பண்ணி இந்த கல்லை செஞ்சிருக்காங்க. இந்தக் கல்லை சூலையில் வைத்து சுடுவதற்கு பதிலாக நன்றாக வெயிலில் உலர வைத்துள்ளார்கள் (20 நாட்கள் காய்ந்த பிறகே இந்த கற்களை கட்டடத்திற்கு பயன்படுத்த முடியும்). முன்கூட்டியே திட்டமிட்டு இந்த மாதிரி வீடுகள் கட்டப்படுவதால், கட்டுமானத்துக்கு முந்தைய நேரம் கொஞ்சம் அதிகமா எடுத்துக் கொள்ளும்.

window

Oxide தரைத்தளம்

இந்த வீடு முழுவதுமே தரை தளத்துக்கு ஆக்சைடு ஃபுளோரிங்தான் பயன்படுத்தி இருக்காங்க. இந்த ஆக்சைட் ஃபுளோரிங் பழைய விஷயம்தான். ஆனால், மீண்டும் பயன்படுத்த ஆரம்பிச்சு இருக்காங்க. மத்த ஃப்ளோரிங் கூட இதை ஒப்பிட்டு பார்க்கும்போது இதன் மூலம் நமக்கு எந்த பிரச்னையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் டைல்ஸ் சிலருக்கு ஒத்துக்காது, கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், இது மாதிரியான ஆக்சைட் ஃப்ளோரின் போடும்போது அதையெல்லாம் தவிர்த்து விடலாம்.

தட்பவெப்ப நிலையை சமன் செய்யும் மண் சார்ந்த வீடுகள்

அடுத்ததா இந்த வீட்ல இருக்குற பெட்ரூம். இதுல இருக்கும் ஹைலைட், வீட்டின் உள் கூரைதான். நார்மல் ஆர்சிசி ரூபிங் (rcc roofing) ஓடு வைத்து ஆர்சிசி பண்ணி இருக்காங்க. இது பாக்றதுக்கு நல்லா இருக்கு. இதை ஃபில்லர் ஸ்லாப் உடன் கம்பேர் பண்ண முடியாது. அது கிராஸ் கட்டிங். ஆனால், ஆர்சிசிக்கு ஆகும் செலவை விட அதில் அதிகமாக ஆகும். இருப்பினும் இரண்டில் இது கண்டிப்பாக பலன் தரும்.

இந்த வீட்டுக்குள்ள இருக்கும்போதே நல்ல கூலாவே இருக்கு. ஒரு நல்ல வீட்டின் அமைப்பென்பது, வீட்டுக்குள்ள வெளிச்சம் கொண்டு வரப்படுவதென சொல்லலாம். அதுதான் நல்ல டிசைன். அந்த வகையில் இந்த வீட்ல எல்லா இடமும் நல்லா வெளிச்சமா தான் இருக்கு. நல்லாவே டிசைன் பண்ணி இருக்காங்க.

wash

Dome shaped மேற்கூரை

அடுத்ததா இந்த வீட்டோட ஹார்ட் ஆப் த பிளேஸ் என்றே சொல்லலாம். இந்த இடத்துல மேற்கூரை டூம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வந்து நாம பேசினா அப்படியே எதிரொலிக்கும். பயங்கரமாக வரும் எக்கோ சப்தத்தை நாலு பக்கமும் பானை வைத்து கொஞ்சம் குறைத்து வச்சிருக்காங்க. அதனால சத்தம் கம்மியா இருக்கு. கிச்சன் சைடு வாலுக்கு ஆக்சைடு அடிச்சிருக்காங்க. இது பாக்றதுக்கு ரொம்பவே நல்லா இருக்கு. இந்த வீட்ல சில இடங்கள்ல கலர் பண்ணிருக்காங்க. பல இடங்கள் கலர் பண்ணாம அப்படியே இருக்கு.

தேக்கு மரத்தினால் ஆன வித்தியாசமான படிக்கட்டு

இங்கே இருக்குற ஒரு பக்க சுவர் மட்டும் கருங்கல்லால் எழுப்பப்பட்டிருக்கு. இந்த வீடு கட்டப்பட்ட ஏரியால நிறைய கருங்கல் கிடைப்பதால் ஒரு ஏரியா முழுதும் சுவர் வச்சுருக்காங்க.

door

அதேபோல மாடிக்கு போற படிக்கட்டு கைப்பிடியை தேக்கு மரத்துல போட்டிருக்காங்க. அந்த படிக்கட்டுக்கான பிரேமை ஜிஐ பைப்ல பண்ணி இருக்காங்க. அதுக்கு மேல தேக்கு மரத்தை போட்டிருக்காங்க. இது பாக்குறதுக்கு வித்தியாசமாவும் அழகாவும் இருக்கு.

1,100 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மொத்த செலவு 18 லட்சம்.