சிறப்புக் களம்

எப்படி நடக்கும் ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் ?

webteam

மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த குரியன் கடந்த ஜூலை 1-ம் தேதி ஓய்வு பெற்றார். இதனை அடுத்து அந்த பதவி காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெறும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். மேலும் வேட்புமனுக்களை புதன்கிழமை தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் இவ்வளவு பெரிய விஷயமாக முன்னர் பேசப்பட்டதில்லை. ஏனெனில் மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் பெரும்பாலும் இருந்தது. அவர்கள் சொல்பவரே துணைத்தலைவர். ஆனால் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்க்கட்சிகள் அளவுக்கு இணையாக உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சிகளில் சிலர் ஆதரவளிக்கிறார்கள். இதனால் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது

தேர்தல் முறை

* மாநிலங்களவை துணை தலைவர் ஓய்வு பெற்ற பின் அந்த பதவிக்கான தேர்தல் நடக்கும் 

தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும்

அவைத்தலைவரான குடியரசு துணைத்தலைவரின் ஒப்புதல் அடிப்படையில் மாநிலங்களவை செயலாளர் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார்

தேர்தல் அறிவிப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும் 

போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

மாநிலங்களவையிலேயே வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும். வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

குறிப்பு : பெரும்பாலும் தேர்தல் தவிர்க்கப்படும் , கட்சியினர் பேசி பொதுவான ஒரு வேட்பாளாரை இறுதி செய்வார்கள்.