இந்தியர்கள் பொதுவாக சிகப்பழகின் மீது அதிக நாட்டம் காட்டுபவர்களாக இருக்கிறார்கள். ஃபேஷன் துறை, சிகப்பழகு விளம்பரங்கள், மேட்ரிமோனி விளம்பரங்கள் என இந்தியாவில், சிகப்பழகு வணிகம் மில்லியன்களை எட்டிக்கொண்டிருக்கிறது.
திரைத்துறையிலும் கூட கருப்பான பெண்ணாக, ஆணாக இருக்கும் நடிகர்கள், அசாத்தியமான திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே தங்கள் நிறத்தையும் தாண்டி ஜொலிக்க முடிகிற நிலைதான் இன்றும் உள்ளது.
சமூக வலைதளங்களில் கருப்பு நடிகர்களின் உருவத்தை கேலி செய்து மீம்ஸ் போடும் இந்த காலகட்டத்தில், சமூகம் வகுத்து வைத்திருக்கும் வரையறைகளைத் தாண்டி கருப்பும், பருத்த உடலும் கூட கொள்ளை அழகுதான் என்பதை பறைசாற்றும் ”The Uncanny Truth Teller 2” என்னும் ஃபேஸ்புக் பக்கம், நகைகள் அணிந்த கருப்பான 3 தென்னிந்திய அழகிகளின் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளது.
இந்த அழகிய புகைப்படம் 30,000 முறைக்கும் மேலாக பகிரப்பட்டிருப்பதுடன், புகைப்படத்தில் இருப்பவர்களைக் குறித்த பாசிடிவ் கமென்ட்ஸ்களையே பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில், பெண்ணின் உடல் அளவு இவ்வளவு இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.