சிறப்புக் களம்

ஏரிகளின் இளவரசி-நைனிதால்

webteam

கண்கவர் மலைகள்,வழியெங்கும் ஏரிகள்,மழைச்சாரலுடன் இயற்கை அழகை தன்னுள் மொத்தமாக பொதித்துவைத்து காண்பவரின் கண்களுக்கு விருந்து படைக்கிறது உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள நைனிதால். 

நைனா என்பது கண்களையும், தால் என்பது ஏரிகளையும் குறிப்பதாலோ என்னவோ, காணும் இடமெல்லாம் கண்களுக்கு குளிர்ச்சி விருந்துதான்.
நைனிதாலின் முக்கிய அடையாளச் சின்னமாக திகழ்கிறது அங்குள்ள நைனி ஏரி. ஏழு மலைகளின் நடுவே சூழப்பட்ட ஒரு தீவு போல அளிக்கும் நைனி ஏரியில் படகு சவாரி செய்வது ரம்மியமான அனுபவமாக இருக்கும்.

டிபன் டாப்
நைனிதாலின் மொத்த அழகையும் உணவருந்திகொண்டே பார்க்கவும், குதிரை சவாரி செய்து கொண்டே பார்க்கவும் சுற்றுலாப்பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய இடம் டிபன் டாப்.

ரோப் வே
சுற்றுலாப் பயணிகளை கவரும் மற்றொரு முக்கியமான அம்சம் ரோப் வே. பனிமலைகளுக்கு நடுவே கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள் காரில் செய்யும் பயணம் மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.

எப்படி செல்லலாம்
நைனிதால் மலைப்பிரதேசம் என்பதால் நேரடியான விமான போக்குவரத்தோ, ரயில் போக்குவரத்தோ இல்லை. விமானம் மூலம் செல்பவர்கள் அருகிலுள்ள பண்ட்நகர் விமான நிலையத்தில் இறங்கியும் ரயில் மூலம் செல்பவர்கள் கத்கோதாம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நைனிதாலுக்கு பேருந்து, வாடகை கார்கள் மூலம் செல்லலாம்.