சிறப்புக் களம்

”பணிநீக்க அறிவிப்புகளுக்கு ஒருமுடிவே இல்லையா?”-விளக்குகிறார் KISSFLOW CEO சுரேஷ் சம்பந்தம்

webteam

தற்பொழுது அதிகரித்து வரும் வேலையின்மை, பணி நீக்கம் பற்றி kissflow தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் அவர்களுடனான ஒரு நேர்காணல்

2022 ல் தங்களுடைய நேர்காணாலில் 2023ல் பணிநீக்கம் என்பது தவிர்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று கூறினீர்கள். அது தற்பொழுது நடந்து வருகிறது. இது இந்தியாவில் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

  • ஐடி துறை பணி நீக்கமானது, இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும். ஏனெனில் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு ஐடி துறையை சார்ந்து தான் உள்ளது. ஆகவே அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் இறக்கத்தை சந்திக்கும் பொழுது, அதை சார்ந்திருக்கும் நமது ஐடி ஊழியர்கள் பாதிப்பிற்குள்ளாவார்கள். ஏனெனில் அத்தகைய நிறுவனங்களில் இந்தியர்கள் தான் அதிகளவு பணி புரிந்து வருகிறார்கள். அவர்களின் பணிநீக்கம் அவர்களது தனிப்பட்ட பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்குகிறது. அதன் வெளிப்பாடு இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும்

2000ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி சூழலில் ஒரு பிளட் பாத் (Bloodbath) வந்ததாக கூறுகிறார்கள். இப்பொழுது மறுபடியும் அதே போல் ஒரு பிளட்பாத் உருவாகுமா?

அந்த அளவிற்கு இருக்காது. ஆனால் இதில் 3 விதமான பணிநீக்கம் இருக்கிறது.

1. excesscapacity layoff: (அதிகப்படியான ஊழியர்களின் பணி இழப்பு)

  • இத்தகைய வேலை இழப்பு என்னவென்றால், ப்ராஜெட் கிடைப்பதற்கு முன்பாகவே, அப் ப்ராஜெட்டுக்காக, வேலையில் அமர்த்தியவரை சில, பல காரணாங்களுக்க்காக பணி நீக்கம் செய்வார்கள். இது ஒருவித பணி நீக்கம்.

2. ட்ரிம்மிங் பணி நீக்கம்.

  • ஒரு அலுவலகத்தில், தேவைக்கு அதிகமான ஊழியர்களை மற்றும் திறமையில்லாத ஊழியர்களை கண்டறிந்து அவர்களை விலக்கிவிடுவது ட்ரிம்மிங் பணி நீக்கம் என்பார்கள்.

3. வாஷ் அவுட்

  • ஒரு டீமில் உள்ள அனைவரையும் (washout )பணியிலிருந்து விடிவிப்பது, தான் உண்மையான் பணி நீக்கம். ஏனெனில் அத்தகைய ப்ராஜெட் கிடைக்காமல் போய் இருக்கலாம், அல்லது அத்திட்டம் தோல்வி அடைந்திருக்கலாம் அச்சமயத்தில் அவர்கள் அனைவரையும், மொத்தமாக பணி நீக்கம் செய்வது தான் ஒரு நிறுவனத்தின் உண்மையான பணி நீக்கம். 

பணி நீக்கம் அல்லது கோவிட் சமயத்தில் சாதாரணாப் பணியாளார்களின் பணி attitude எப்படி இருக்கிறது?

  • covid சமயத்தில் ஐடி ஊழியர்களின் பணி அதிகமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் தங்களது வேலையை வீட்டிலிருந்தே செய்ததால், அவர்களின் கவனம் திசை திரும்பவில்லை. ஆகவே... அவர்களுக்கான பணியில் அவர்கள் திறம்பட செய்தார்கள். lockdown முடிந்த பிறகு அவர்களின்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பது எனது கருத்து.

பணி நீக்கம் , ஐடி துறையில் அடிமட்ட பணியாளார்கள், மற்றும் மேல் மட்ட பணியாளார்கள் மட்டும் பாதிப்பதாக கூறுகிறார்கள். இதில் உங்களின் பார்வை என்ன?

  • இதில் எனது கருத்து மாறுபட்டு உள்ளது. ஒரு நிறுவனம் cost structure ஐ கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தில் பணிபுரியும் vp, director போன்ற அதிக ஊதியம் பெறும், உயர் பதவியில் உள்ளவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஏனெனில், அவர்களின் பணிநீக்கத்திற்கு இணையானது குறைந்த ஊதியம் பெறும் அடி மட்ட பணியாளர்கள் 10 பேர் வேலை இழப்பது, ஆகவே ஒரு நிறுவனத்தில் மேல் மட்டத்தில் பணியாற்றுபவரின் நிலமை தான் மிகவும் கேள்விக்குள்ளாகிறது.

இந்தியாவில் ஐடி துறையில் பாதிப்பு வரக்கூடும் என்று அரசாங்கம் இதை சரி செய்ய, மற்றும் skill development அதிகரிக்க ஏதேனும் முயற்சி செய்ய முனைகிறதா?

  • இது அரசாங்கத்தை தாண்டிய ஒரு விஷயம். இதற்கும் skill developmentக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நிறுவனத்தில் 10 பேர் வேலை செய்யும் இடத்தில் 100 பேர் வேலையில் அமர்த்தப்படுவதால் இத்தகைய சூழ்நிலை உருவாகிறது. இதில் skill development சம்பந்தமில்லை. அதே நேரத்தில் அதிகப்படியான skill இருக்கும் ஒருவரால், அத்துறையில் நீடித்து இருக்கமுடியும்.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளரின் பணி சுமை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?

  • அவர்களின் பணிச்சுமையை விட மன அழுத்தம் அவர்களுக்கு அதிகம் இருக்கும். அவர்களுடன் உடன் வேலை செய்யும் நண்பர்கள் அவர்களை விட்டு சென்று விட்டார்கள் என்ற சோர்வு அவர்களுக்கு மன அழுத்தத்தை தரும். உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணி செய்யும் இடத்தில் இரண்டு இலக்க பணியாளர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்வது தேவை இல்லாத ஒன்று. இது டோக்கனிசம் எனப்படும். இது மற்ற நிறுவனங்களின் மேற்பார்வைக்காக செய்யப்படுவது தேவையில்லாத ஒன்று. உண்மையிலேயே அந்நிறுவனம், நிதி பற்றாக்குறையை சந்தித்து இருந்தாலோ அல்லது, போதிய ப்ராஜெக்ட் இல்லாமல் இருந்தாலோ பணியாளார்களை பணி நீக்கம் செய்யலாம், ஆனால் டோக்கனிசத்துக்காக பணிநீக்கம் செய்யப்படும் பணியாளார்கள் பாதிக்கப்படுவதுடன், உடன் அந்நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். அதனால் வேலை பாதிப்படையும்.

ஐடியில் பணிநீக்கம் செய்யப்படுவது ஏன் மற்ற துறை நிறுவனங்களுக்கும் பாதிப்பை உண்டு செய்கிறது?

  • ஐடி துறையை சார்ந்து தான் பணபுழக்கமும், இந்திய பொருளாதாரமும் இருக்கிறது என்பது ஒரு காரணம். அதே போல் ஐடி துறையில் 1:5 என்பார்கள் அதாவது ஐடி துறையில் ஒரு வேலை உருவானால் அதைக் கொண்டு வெளியில் ஐந்து வேலை உருவாகும். ஆக, ஐடி துறையின் பணிநீக்கம் மற்ற துறைகளையும் பாதிக்கிறது.

ஒரு நிறுவனம் ஒரு ப்ராஜெட்டை நம்பி பணியாட்களை வேலையில் அமர்த்தி பின் அவர்களை பணிநீக்கம் செய்வது, அந்நிறுவனத்தின் தவறான கண்ணோட்டம் தானே?

  • ஆம், இது தவறான கணிப்பு தான். இதில் தொய்வு வரும்பொழுது இத்தகைய சூழல் உருவாகும்.

டிக்டாக் போன்ற நிறுவனங்களில் இந்தியர்களை ஆட்குறைப்பு செய்வது போன்ற செயல் சரியானது தானா?

  • அது உண்மையானதா என்று தெரியவில்லை. அப்படி செய்யமுடியாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்று நடந்தால் நிறுவனம் திவாலாகும் அபாயம் இருக்கிறது. அப்படி டார்கெட் செய்யமுடியாது.

           moon light என்பது பணியாட்களின் ஒப்பந்தத்தை பொருத்தது.

பணி நீக்கம் பற்றி, உங்களின் பார்வை என்ன? ஆலோசனை என்ன?

  • இது மே, ஜூன் மாதங்களில் இது சரி ஆகும். ஒவ்வொரு பணியாளரும், அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ளுதல், வேலை நேரம் இதில் கவனமாக இருத்தல் வேண்டும்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

இதை பற்றி விரிவாக தரிந்துக்கொள்ள கீழே இருக்கும் வீடியோ தொகுப்பை காணவும்..