சிறப்புக் களம்

7 முறை ஆட்சியைப் பிடித்த இரட்டை இலை இரண்டாக உடைந்தது

7 முறை ஆட்சியைப் பிடித்த இரட்டை இலை இரண்டாக உடைந்தது

webteam

இரட்டை இலை சின்னத்தில் அதிமுக முதன் முதலில் வெற்றி பெற்றது 1973-ம் ஆண்டு நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில். இதையடுத்து, 1977-ல் நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு 1980 மற்றும் 1984ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்தது.

எம்ஜிஆர் இரட்டை இலைச் சின்னத்தில் மூன்று முறை ஆட்சியைப் பிடித்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா 1991ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அதன்பிறகு 2001, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது. இப்படி எம்ஜிஆர் காலத்தில் மூன்று முறையும் அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா காலத்தில் நான்கு முறையும் என தமிழகத்தில் ஏழு முறை ஆட்சியைப் பிடித்த இரட்டை இலைச் சின்னம் விளக்குக் கம்பம், தொப்பி என இரண்டாக உடைந்துள்ளது. அதிமுகவும் அதிமுக அம்மா எனவும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா எனவும் இரண்டாகப் பிரிந்து நிற்கிறது.