house
house pt desk
சிறப்புக் களம்

பட்ஜெட் வெறும் ரூ.35 லட்சம் தான்! மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்களால் கட்டப்பட்ட சொகுசு வீடு!

Kaleel Rahman

மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி திருவனந்தபுரம் அருகில் உள்ள மணந்தளாவில் கட்டப்பட்டுள்ள வீட்டின் சிறப்பை விரிவாகப் பார்க்கலாம்.

”இதுதான் எங்களுடைய வீடு என முடிவு செய்தோம்” - வீட்டின் உரிமையாளர் கால்வின் வர்கீஸ்

இயற்கை சார்ந்த ஒரு வீடு கட்லாம்ணு முடிவெடுத்து இந்த வீட்டை கட்டியிருக்கோம். இதற்காக கட்டிடக்கலை நிபுணர் பவித்ரனை தொடர்பு கொண்டோம். அப்போது அவர், மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வீடு கட்டும் முறையை சொன்னார். அவர் கொடுத்த அந்த டிசைனை பார்த்த போது இதுதான் எங்களுடைய வீடு என முடிவு செய்தோம்” என்றார் வீட்டின் உரிமையாளர் கால்வின் வர்கீஸ்.

door

லோ பேரிங் பவுன்டேஷன்

இந்த வீட்டுக்கு கல் வைத்து லோ பேரிங் பவுன்டேஷன் போட்டிருக்காங்க. இந்த வீட்டோட பகுதியின் தரைத்தளத்துக்கு பென்ஸிங் ஸ்டோன்ஸ் (வேலிக்கல்) பயன்படுத்தி இருக்காங்க. அடுத்து இந்த வீட்டோட கார் பார்க்கிங் ஏரியா. இந்த ஏரியா மேற்கூரைக்கு டிஎம்டி பார் கம்பிக்கு குறுக்கே சன்னமான கம்பி போட்டு அதுக்கு மேல செடியை படரவிட்டிருக்காங்க. அதனால நல்ல நிழலாக இருக்கு. இயற்கை சார்ந்து அமைக்கப்பட்டுள்ளதால் இது பார்ப்பதற்கும் அழகாக இருக்கு.

வீட்டின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திண்ணை!

இந்த வீட்டின் முன்பகுதி திண்ணையில் இருக்கும் இருக்கை ரொம்ப ரொம்ப முக்கியம். இது பாக்குறதுக்கு மரத்தால் அமைத்தது போல் இருந்தாலும் சிமெண்ட் கான்கிரீட் போட்டு அதுக்கு மேல மரத்தை ஒட்டி வச்சிருக்காங்க. இதோட தரைத்தளத்துக்கு அன் சைஸ்டு ஸ்டோன் பயன்படுத்தி இருக்காங்க. இதோட கலர் பேட்டன் பாக்குறதுக்கு ரொம்பவே நல்லா இருக்கு. அடுத்ததா இந்த விட்டோட முன்கதவு. இந்த கதவு செட்டிநாடு கட்டிடக்கலையைச் சேர்ந்தது. இந்த பழைய கதவை மறு பயன்பாடு செஞ்சிருக்காங்க.

windows

பார்மல் லிவ்விங் ஏரியா

இந்த வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு பார்மல் லிவ்விங் ஏரியா இருக்கு. இந்த ஏரியாவுல அழகான சோபா அமச்சிருக்காங்க. இது பாக்குறதுக்கு அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கு. இந்த ஏரியாவுல இருந்து அடுத்ததாக வந்தால் ஓப்பன் டைனிங் ஏரியா மற்றும் ஓப்பன் கிச்சன் அமச்சிருக்காங்க. கிச்சனோட தரைத்தளத்துக்கு உட் ஃப்ளோரிங் போல இருந்தாலும், கான்கிரீட் மேலே மரத்தோட லேயரை பெவிக்கால் போட்டு ஒட்டியிருக்காங்க. இது பாக்குறதுக்கு மரத்தால் ஆன தரை போலவே அழகாக இருக்கு. அடுத்ததா கிச்சனோட ஸ்லாப்புக்கு பிளாக் கேலக்ஸி கிரானைட் பயன்படுத்தி இருக்காங்க. இதுவுமே மறு பயன்பாடு செய்யப்பட்டதுதான்

கிச்சன் ஸ்லாப்-க்கு கீழே உள்ள ஸ்டோரேஜ் பகுதியில் உள்ள கதவுகள் கூட ஜன்னல் கதவுதான். அந்த ஜன்னல் கதவை எடுத்து பயன்படுத்தி இருக்காங்க. கதவை பார்க்கும் போது பழசு போல தெரிந்தாலும், அதை ஓப்பன் பண்ணினால் மாடுலர் கிச்சனில் இருக்கும் கேபினட் போலவே இருக்கு. அடுத்ததா இங்கு ஒரு கவுண்டர் டேபிள் இருக்கு. அதுவும் மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

எல்லோ ஆக்ஸைட் தரைத்தளத்துடன் கூடிய 4 பெட்ரூம்கள்

இந்த வீட்ல மொத்தமா 4 பெட்ரூம் இருக்கு அதுல தரைத்தளத்துல இரண்டும், முதல் மாடியில் இரண்டும் இருக்கு. இதுல ஒரு பெட்ரூம். தரைத்தளத்துக்கு எல்லோ ஆக்ஸைட் ஃப்ளோரிங பயன்படுத்தி இருக்காங்க. அதேபோல உட்கூரைக்கு பில்லர் ஸ்லாப் சீலிங் பயன்படுத்தி இருக்காங்க. இந்த பில்லர் ஸ்லாப்ல பில்லிங் மெட்டீரியலா ஓடு பயன்படுத்தி இருக்காங்க இது பாக்குறதுக்கு ரொம்பவே அழகா இருக்கு.

kitchen

வீ பார்மல் லிவ்விங் ஏரியா!

அடுத்து இந்த வீட்டோட வீ பார்மல் லிவ்விங் ஏரியா. இது இந்த வீட்டோட ஹார்ட் ஆப் தி பிளேஸ் என்றே சொல்லலாம். ப்ரண்ட்ஸ் அண்டு பேமிலி என யார் வந்தாலும் இந்த இடம் ஒரு இனட்ராக்ட் பிளேஸா இருக்கும். இங்கு இருந்து வீட்டின் எந்த பகுதியையும் பார்க்கும் அளவிற்கு இந்த இடத்தை டிசைன் பண்ணியிருக்காங்க. இதோட இருக்கைக்கு கற்களால் தளம் அமைத்து அதன் மேல் கான்கிரீட் போட்டு அதுக்கு மேல மரத்தை பேஸ்ட் பண்ணியிருக்காங்க. அதேபோல இந்த ஏரியாவை சுற்றிலும் நான்கு புறமும் ஜன்னல் வச்சிருக்காங்க. அதனால் வெளிச்சமாவும், காற்றோட்டமாவும் இருக்கு.

ஸ்பைரல் டிசைன் படிக்கட்டுகள்

மாடிக்குச் செல்லும் படிக்கட்டு மரப்படிக்கட்டு போல இருந்தாலும் இதுவும் காங்கிரீட் படிக்கட்டுதான். ஸ்பைரல் டிசைன் படிக்கட்டுகளை மரத்தால் அவ்வளவு சுலபமாக கொண்டு வர முடியாது. அதனாலதான் கான்கிரீட்டில் அமைத்து அதற்கு மேலே மரத்தை ஒட்டியிருக்காங்க. வீட்டின் மேலே உள்ள முகப்புக்கு கண்ணாடி போட்டிருக்காங்க. சில இடங்களில் காற்று வெளியே போவதற்கு வசதியாக கண்ணாடி போடாமல் அப்படியே விட்டிருக்காங்க. எப்பவுமே சூடான காற்று வெயிட்லெஸ்-ஆக இருக்கும். அதனால், மேல் நோக்கி வரும் சூடான காற்று வெளியே செல்ல ஒரு கேப் இருந்தால் காற்று வெளியே செல்ல ஏதுவாக இருக்கும். வீட்டின் உட்புறமும் காற்றோட்டமாக இருக்கும். காற்றை வெளியேறவும் காற்றோட்டத்திற்கும் ஜன்னல்கள் மட்டும் போதாது, இதுபோன்று காற்று வெளியே செல்வதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்ததால் சூடான காற்று வெளியே செல்லும். காற்றோட்டமும் நன்றாக இருக்கும்.

house owners

மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடு

அடுத்து இந்த வீட்டின் புறவாசல். இதுல ஒரு திண்ணை அமச்சிருக்காங்க. இதோட தரைத்தளம் சிமெண்ட் ஃப்ளோரிங் தான். இதுல பிரேம் போல டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இதுக்கு மேலே போட்டிருக்கிற கூரையை தாங்கிப்பிடிக்க மறு பயன்பாடு செய்யப்பட்ட மரத்தூண் வச்சிருக்காங்க அதுக்கு மேல பனங்கை பயன்படுத்தி ஓடு போட்டிருக்காங்க. இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தரம் அறிந்துதான் அதை தேவையான அளவிற்கு பயன்படுத்தி இருக்காங்க. அதனாலதான் இந்த வீடு 90 சதவீதம் மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு கட்டியிருக்காங்க.

மறு பயன்பாடு செய்யப்பட்ட செங்கல் மற்றும் லைட் சிமெண்ட் கலவை பயன்படுத்தி எழுப்பப்பட்ட சுவர்கள்

இந்த வீட்டின் சுவரை எழுப்ப செங்கல் பயன்படுத்தி இருக்காங்க. ஆனால், ஒரு செங்கலுக்கும் மறு செங்கலுக்கும் நடுவுல லைட் சிமெண்ட் கலவை பயன்படுத்தி இருக்காங்க. அதுக்கு மேலே மண் மணல் சுண்ணாம்பு அரிசி உமி இதெல்லாம் பயன்படுத்தி பிளாஸ்டிங் பண்ணியிருக்காங்க. அதுக்கும் மேலே மண் மைதா மாவு பெவிக்கால் கலவையிலான மட் பெயிண்ட் பண்ணியிருக்காங்க. அதேபோல் இந்த வீட்டை கட்ட பயன்படுத்தப்பட்ட செங்கல் அனைத்தும் மறு பயன்பாடு செய்யப்பட்டது தான். ஒரு செங்கல் கூட புதிதாக வாங்கியதில்லை.

living area

இந்த வீட்டை கட்டி முடிக்க ஆன பட்ஜெட் 35 லட்சம் ரூபாய். இந்த வாரம் பார்த்த வீடு கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்திருக்கும். இது போன்ற பல வித்தியாசமான வீடுகளின் சிறப்பான தகவல்களோடு வரும் நாட்களில் பார்க்கலாம்.