சிறப்புக் களம்

உலகைச் சுற்றிய மோடி....275 கோடி செலவு....

உலகைச் சுற்றிய மோடி....275 கோடி செலவு....

Rasus

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இந்த மூன்று ஆண்டுக்குள் உலகைச் சுற்றி வந்ததில் பெரும் சாதனையே படைத்திருக்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் பயணம் செய்த தூரம் 3 லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர். 119 நாட்களில் 45 நாடுகளைச் சுற்றி வந்திருக்கிறார். அவர் பிரதமராகப் பதவி வகித்த கால அளவில் இது 10 சதவீதம். 

முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கை முந்தியிருக்கிறார் மோடி. முதல் இரண்டு வருடங்களில் 95 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார் மோடி. மன்மோகன் அப்படி கழித்தது 72 நாட்கள்தான். 
சில நாடுகளுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார் மோடி. அந்த வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருப்பது அமெரிக்காதான். ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான்கு முறை அமெரிக்கா போய் வந்து விட்டார் மோடி. அதற்கு அடுத்தபடியாக சீனா, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம், ரஷ்யா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இரண்டு முறை போய் வந்திருக்கிறார்.  

தனது பயணத் திட்டத்தை எப்போதும் வெற்றிகரமாக வடிவமைத்த மோடி, போகிற நாட்டில் ஹோட்டலில் தூங்கினால் நேரம் வீணாகும் என்பதால் பெரும்பாலும் தூங்கும் வேலையை விமானத்திலேயே முடித்து விடுவாராம். 

மோடி ஆட்சிக்கு வந்த முதல் வருடம் அதிக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அதன்பிறகு அது படிப்படியாகக் குறைந்தது. முதல் வருடத்தில் 55 நாட்கள் வெளிநாட்டில் செலவிட்ட மோடி, அடுத்த வருடம் 40 நாட்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்தார். மூன்றாவது ஆண்டில் அது வெறும் 24 நாட்களாகக் குறைந்தது.
2014 மே 26ல் ஆரம்பித்து இதுவரையில் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான விமானச் செலவு 275 கோடி என்கிறது பிரதமர் அலுவலக இணைய தளம். இதில் ஒரு ஐந்து பயணச் செலவுகள் மட்டும் விடுபட்டுப் போயிருக்கிறது.