சிறப்புக் களம்

இந்த 10 விஷயங்களை செஞ்சா போதும்... உங்க வீட்டு ரோஜாக்களிலும் தேன் சொட்டும்! #GardeningTips

webteam

பண்டைய ரோமானிய மற்றும் கிறிஸ்தவ மரபுகளினால் பிப்ரவரி 14ம் தேதி, காதலர் தினமாக கொண்டடப்பட தொடங்கியது. சரியாக சொல்லவேண்டுமென்றால், கி.பி 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட கிறிஸ்தவ தியாகியான செயிண்ட் வாலண்டைன் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்பட தொடங்கப்பட்டது. காலப்போக்கில் அதுவே காதலர் தினமாக மாறி, காதலுடன் தொடர்புடையதாக மாறியது. 20 ஆம் நூற்றாண்டில், காதலர்தினம் விடுமுறையாகக்கூட அறிவிக்கப்பட்டது. காதலர் தின அட்டைகள், பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளின் பரிமாற்றம் யாவும் இந்த காதலர் தின சமயத்தில் மிகப்பிரபலம். இப்படிபட்ட காதலர் தினத்திற்கு ரோஜா பூக்களின் பங்கு, மிக மிக முக்கியமானது. 

பூக்களில் எப்பவும் ரோஜாவிற்கென்று தனி சிறப்பு உண்டு. ரோஜாவுக்கு, காதலர் தினத்தன்று தனி சிறப்பு உண்டு. அதிலும் காதலர் தினத்தை பொருத்தவரை சிவப்பு ரோஜாக்களுக்கு தான் மதிப்பு அதிகம். அதனாலேயே ரோஜா உற்பத்தியில் 90 சதவீதம் சிவப்பு ரோஜாக்கள்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பிற வண்ண ரோஜாக்கள் 10 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிறார்கள் ரோஜா உற்பத்தியாளார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஓசூரில் ரோஜாக்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் சிகப்பு ரோஜா, கலர் ரோஜா, கிரான்ட் கலா, பர்ஸ்ட் ரெட் , லவ்லி ரெட் , பிரைம் டைம் , டிவோஷனல் ரெட், அவலான்ஞ் ரெட், ஹாட் சாட், சவரின், அயன் மேஜிக் என பல்வேறு வண்ணத்திலான பூக்கள் பூக்கும் செடிகள் அங்கு பயிரிடப்படுகின்றன. ரோஜா மருத்துவ குணமும் உடையது. பலதரப்பட்ட ரோஜாவின் பல வகைகளை, ஊட்டியில் ரோஜாபூங்கா நாமே பார்க்கலாம். 

`அங்க மட்டும் தான் ரோஜா அழகாக பூத்து குலுங்கும்; எங்க வீட்டு மாடி தோட்டத்துல பூக்கமாட்டேங்குது’ன்னு நீங்கள் சொல்வது புரிகிறது. நம் வீட்டிலும் ரோஜா அழகாக வளர, சின்ன சின்ன டிப்ஸ்களே போதும்! இதை மட்டும் சரியாக செய்துவந்தால், கொஞ்ச நாளில் நீங்களும் ஒரு ரோஜா தோட்டம் போட்டுடலாம்.

டிப்ஸ்:

1. செம்மண் தான் ரோஜா செடிக்கு என்னிக்குமே பெஸ்ட். ஆகவே அதில் செடியை வளருங்கள்!

2. உரம் ரோஜாவுக்கு மிகவும் முக்கியம். அதேநேரம் உரம் போடும் முன் வேரை சுற்றி மண்ணை கிளறிக்கொடுக்க வேண்டும்.

3. ரோஜா செடியில் பழுத்த இலைகள், பூச்சி வந்த இலைகள் இருந்தால் அவற்றை நிச்சயம் அகற்றிவிட வேண்டும்.

4. டை அமோனியம் பாஸ்பேட் 20 - இதை செடியின் வேர்களை சுற்றியும் போடலாம். அல்லது, செம்மண்ணில் கோக்கோபிட் மாட்டுச்சாணம், தொழு உரத்துடன் கலந்து போடலாம்.

5. மண்புழு உரத்துடன் முட்டை ஓடு மற்றும் டீ தூளை கலந்து பொடி செய்து செடிக்கு பயிரிடலாம்.

6. மாட்டு எருவினை காயவைத்து பொடி செய்து அத்துடன் வெங்காய தோலை சேர்த்து செடிக்க்கு உரமாக உபயோகப்படுத்தலாம்.

7. நன்கு மக்கிய ஆட்டு சாணத்தை மண்புழு உரம் கலந்து 3 வாரத்திற்கு ஒருமுறை செடியில் போடலாம்

8. ரோஜா செடியில் இலைகளில் சுருள் இருந்தால், அவை செடி நோய்வாய்ப்பட்டதை குறிக்கும். அது போக மக்னீஷியம் சல்பேட் தண்ணீரில் கலந்து இலைகளில் மட்டும் தெளிக்கவேண்டும். இது, 1 மாதத்திற்கு ஒரு முறை இலைகளில் தெளிக்கவேண்டும். (அளவு: 1 லிட்டர் தண்ணிரில் 1 ஸ்பூன் கலக்கவேண்டும் அல்லது ஒரு லிட்டர் தண்ணிரீல் 2 மூடி (20 ML) வேப்ப எண்ணெய் கலந்து துளிர் இலைகளில் தெளிக்க வேண்டும்)

9. செடியின் வேர்களை சுற்றி டீ தூள் போடலாம். அதேபோல முட்டை தோல், வெங்காயத்தோல், காய்ந்த பழத்தோல் ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, அதை 2 ஸ்பூன் அளவு எடுத்து அதை தண்ணீரில் கலந்து செடிக்கு ஊற்றிவரலாம்

10. பூவை செடியிலிருந்து பறிக்கும் பொழுது கத்திரிகோலைக்கொண்டு இலையுடன் சேர்த்து அதை கட் செய்ய வேண்டும். அப்பொழுது தான், அவ்விடத்தில் அடுத்த கிளை துளிர்விடும்!

இந்த காதலர் தினத்தில் ரோஜாசெடி ஒன்று வாங்கி வீட்டில் வளர்த்து பூக்களால் வீட்டை அலங்கரிக்க தயாராகிட்டீங்களா? 

- ஜெயஸ்ரீ அனந்த்