கடந்த டிசம்பர் 31ம் தேதி இந்தியாவில் வாட்சப் மூலம் ஆயிரத்து 400 கோடி புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறப்பட்டுள்ளன என வாட்சப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வாட்சப் மூலம் இவ்வளவு அதிக தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளது இதுவே முதல்முறை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு தீபாவளி நாளில் 800 கோடி வாழ்த்துகள் பரிமாறப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.