கவிதை:
ராணுவ வீரனின் கடைசி நிமிடங்கள்:
இதில் எத்தனை பேருக்கு
என்னைப் போல
போருக்கு செல்ல மனம் வரும்!
இதில் எத்தனை பேருக்கு
என் பெற்றோர் போல
தியாகம் செய்ய மனம் வரும்!
இதில் எத்தனை பேருக்கு
என் மனைவி போல
காதலிக்க மனம் வரும்!
இதில் எத்தனை பேருக்கு
என் குழந்தைகள் போல
காத்திருக்க மனம் வரும்!
இதில் எத்தனை பேருக்கு
என் நண்பர்கள் போல
ஆதரவளிக்க மனம் வரும்!
இதில் எத்தனை பேருக்கு
என் சொந்தங்கள் போல
உறவாட மனம் வரும்!
என் குடும்பத்தை
பார்த்துக் கொள்வீர்கள்
என்ற நம்பிக்கையில்
கனத்த இதயத்தோடு
விடை பெறுகிறேன்!
வந்தே மாதரம்............