சுற்றுச்சூழல்

இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் மோசமான காற்றின் தரம் பதிவாகியுள்ளது?

Veeramani

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹரியானாவின் ஜிந்த் மற்றும் மானேசர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் செவ்வாயன்று மோசமானகாற்றின் தரம் பதிவாகியுள்ளது.

மேலும் இந்திய நகரங்களான சர்க்கி தாத்ரி, தருஹேரா, ஃபரிதாபாத், ஃபதேஹாபாத், காசியாபாத், குருகிராம், ஹாபூர், ஹிசார், கட்னி, கோட்டா, மண்டிகேரா, மீரட், மொராதாபாத், மோதிஹாரி, முசாபர்நகர், நர்னால், நொய்டா மற்றும் பானிபட் உள்ளிட்ட நகரங்களிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என்று மாசுகட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட இந்திய நகரங்களில் குளிர்காலம் தொடங்கியதில் இருந்து வாகனப்புகை மற்றும் தொழிற்சாலை புகையின் காரணமாக காற்றின் தரம் மோசமாகவே பதிவாகி வருகிறது.