சுற்றுச்சூழல்

இமயமலையில் வாழும் பிணந்தின்னி கழுகுகள் முதுமலையில் கண்டறியப்பட்டுள்ளது: ஆய்வாளர்கள் தகவல்

Veeramani

இமய மலைப்பகுதிகளில் வாழும் பிணந்தின்னி கழுகு ஒன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதுமலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

அழிவின் விளிம்பிலுள்ள பிணந்தின்னி கழுகுகள் தமிழகத்தில், முதுமலை வனத்திற்குட்பட்ட மாயார் பள்ளத்தாக்கில்தான் அதிகம் உள்ளன. அங்கு பல கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் ஆராய்ச்சியில் இமயமலையில் வாழும் பிணந்தின்னி ஒன்று 10 ஆண்டுகளுக்குப் பின் கண்டறிப்பட்டுள்ளது. முதுமலை வனத்திற்குட்பட்ட மாயார் பள்ளத்தாக்கு பகுதியை, கழுகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்க ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.