சுற்றுச்சூழல்

தேக்கடியில் அழகாக அணிவகுக்கும் மிளா வகை மான்கள் 

webteam

தேக்கடியில் நீர்த்தேக்கப் பகுதிகளில் உலாவரும் மிளா வகை மான்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றன.

தென்மேற்குப் பருவமழை மற்றும் அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தேக்கடி ஏரியில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஏரியின் கரைகளில் பசும்புற்கள் செழித்து வளர்ந்துள்ளன. 

அதோடு, தேக்கடி ஏரிக்கரைகளில் துளிர்விட்டிருக்கும் புற்கள் பசுமை போர்த்தியுள்ளன. இதையடுத்து மேய்ச்சலுக்காகவும், தண்ணீர் குடிக்கவும் தேக்கடியின் சிறப்பு பெற்ற "சாம்பார்" இன மிளா வகை மான்கள் கூட்டம் கூட்டமாய் அணிவகுத்து தேக்கடி ஏரிக்கரைக்கு வந்து செல்கின்றன. 

அழகாக அணிவகுக்கும் மிளாக்கள், ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி விருந்து படைக்கின்றன. வன விலங்குகளின் நடமாட்டத்தைக் காண்பதற்காகவே படகு சவாரி செய்பவர்களை இந்த மிளா மான்கள் ஏமாற்றுவதில்லை. இவற்றை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், அவற்றை புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.