சுற்றுச்சூழல்

பல நாடுகளில் காட்டுத் தீ: காலநிலை நெருக்கடிக்கு தடுப்பூசி இல்லை - உலக சுகாதார நிறுவனம்

பல நாடுகளில் காட்டுத் தீ: காலநிலை நெருக்கடிக்கு தடுப்பூசி இல்லை - உலக சுகாதார நிறுவனம்

Veeramani

துருக்கி, கீரீஸ், அல்ஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் காட்டுத்தீ பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், காலநிலை நெருக்கடிக்கு தடுப்பூசி இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்திருக்கிறார்.

உலகை அச்சுறுத்தும் காட்டுத்தீ மற்றும் ஐபிசிசி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ள டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,கடந்த சில வாரங்களில், பேரழிவு தரும் காட்டுத்தீ உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளதுஇனியும் நாம் வழக்கம்போல நமது வேலையைத் தொடர்ந்தால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள் எந்தவொரு நோயைவிடவும் அதிகமாகும். நாம் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவோம், ஆனால் காலநிலை நெருக்கடிக்கு தடுப்பூசி இல்லை.

புதிய ஐபிசிசி அறிக்கையின்படி, வ்வொரு டிகிரி வெப்பத்தின் அதிகரிப்பும் நமது ஆரோக்கியத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஆபத்தை விளைவிப்பதை காட்டுகிறது. இதேபோல், வெப்ப உமிழ்வு மற்றும் வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும்” எனத் தெரிவித்தார்