சுற்றுச்சூழல்

நிலவேம்பு ஆபத்து இல்லாதது: சித்த மருத்துவர் சிவராமன் விளக்கம்

webteam

நிலவேம்பு கசாயத்தால் எந்தவித ஆபத்தும் வராது என்றும், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற தகவல் பொய்யானது என்றும் சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யோக பேட்டி அளித்த அவர், “திடீரென நிலவேம்பு கசாயம் குறித்து வதந்திப் பரப்பப்படுகிறது. நிலவேம்பு பொடியிலுள்ள 9 மூலிகைகளில், அக்ரோஸை மட்டும் எடுத்து எலிக்கு கொடுத்து சோதித்து, அதன் அடிப்படையில் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் என்ற பூதாகரமான ஒரு பொய்யை பரப்பி வருகின்றனர். மெத்தனாலிக் எக்ஸ்ராக்டோ அல்லது அக்ரோஸ் எக்ஸ்ராக்டிலோ வரக்கூடிய ஆதாரத்தையும், 9 மூலிகைகளை கொண்டு காய்ச்சப்படும் கசாயத்தையும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. அத்துடன் கசாயம் என்பது 5 அல்லது 7 நாட்களுக்கு ஒரு முறையோ மற்றும் 1 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறையோ பரிந்துரைக்கக்கூடிய சித்த மருந்து. எனவே இதில் எந்த விதமான ஆபத்தும் வராது.” என்று கூறினார்.