பெண்கள் நீண்ட ஆயுளைப் பெற வேண்டும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஜிம், பல நவீன ட்ரீட்மெண்ட் என புதிய நாகரீகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் தேவையே இல்லை சூரிய ஒளி உடலில் படும்படி சிறிது நேரம் நின்றாலே போதும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்டர்னல் மெடிசன் ஜர்னல் நடத்திய ஆய்வில், தினமும் காலை சூரிய ஒளியில் நின்றாலே போதும் இதய நோய், உடல் பருமன் போன்ற பல பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளைப் பெற முடியும் என தெரியவந்துள்ளது. 25-64 வயதுடைய 29,518 ஸ்வீடிஷ் பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் சூரிய ஒளி பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது என தெரியவந்துள்ளது. இதனால் தான் முன்பு சூரிய நமஸ்காரம், சன் பாத் போன்றவை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இளமை, அழகு, ஆரோக்கியம் அளிக்கும் சூரிய நமஸ்காரத்தை செய்யும்போது பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்கிறது இந்த ஆய்வு. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி தோலில் படும்போது பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.