சுற்றுச்சூழல்

மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் - 80பேர் பலி

webteam

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் 7 மாதத்தில் இதுவரை 80 பேர் இறந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

H1N1 எனப்படும் கொடிய நச்சுக்கிருமிகளின் தாக்கத்தால் பன்றி காய்ச்சல் நோய் உருவாகின்றது. குறிப்பாக, மழைக்காலங்களில் உருவாகும் கொசுக்கள் இந்த நோயை பரப்புவதற்கான காரணியாக கண்டறியப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதுபோன்ற நோய்த்தொற்றினால் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலில் நேற்று மாலை இரண்டு பேர் மரணமடைந்தனர். அதே போல் கடந்த வாரம் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 

இதுகுறித்து புனே மாநகராட்சி அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், "புனேவில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 80 பேர் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். மேலும் 375 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.