ராமேஸ்வரம் பகுதியில் கடல் நீர் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் சிறிய ரக படகுகள் தரைதட்டி நிற்பதுடன் கடலுக்கு அடியில் உள்ள தாவரங்களை தெளிவாக காணமுடிகிறது.
ராமேஸ்வரம் பகுதியில் இன்று பலத்த காற்று வீசிவரும் நிலையில், திடீரென இன்று துறைமுகத்திலிருந்து சங்குமால் வரை பகுதிகளில் கடல்நீர் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக நாட்டுப் படகுகள் தண்ணீரின்றி மணலில் நிற்கின்றன.
இதேபோல் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் கடல்நீர் உள் வாங்கியதால் கடலுக்குள் உள்ள பாறைகளை தண்ணீரின்றி காண முடிவதுடன் பக்தர்களால் பூஜை செய்து கடலுக்குள் விட்டுச் சென்ற சிவலிங்கத்தையும் தெளிவாக காணமுடிகிறது.