சுற்றுச்சூழல்

டெங்கு பரவ மழைதான் காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜு

டெங்கு பரவ மழைதான் காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜு

webteam

பருவமழை அதிகமாக பெய்வதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. ஏராளமானோர் இந்தக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். நேற்று 14 பேர் பலியாகினர். இன்று காலையில் 7 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவம முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பருவமழை அதிகமாக பெய்வதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுகிறது. மழைநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.