சுற்றுச்சூழல்

ராசிபுரம்: மருத்துவக் கழிவுகளை சாலையோரத்தில் வீசிச்சென்ற அவலம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நிவேதா ஜெகராஜா

ராசிபுரம் அடுத்த சேலம் சாலையில் ஆள் அடையாளம் தெரியாத சிலர், மருத்துவக் கழிவுகளை சாலையோரம் வீசி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, அங்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. இவ்விவகாரத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சேலம் சாலையில் உள்ள ஏரிக்கரை பகுதி சாலையிலும் மருத்துவ கழிவுகளான ஊசி, மருந்துபாட்டில்கள், பயன்படுத்திய பஞ்சு உள்ளிட்ட மருத்துவகழிவுகளை மூட்டை மூட்டையாக யாரோ வீசி சென்றுள்ளனர். 

‘மருத்துவக் கழிவுகளை உரிய விதிமுறைகளின்படி முறையாக அப்புறப்படுத்த வேண்டும்’ என அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையிலும், சில தனியார் மருத்துவமனைகள் இப்படி மருத்துவக் கழிவுகளை வீசி தங்களுக்கு இடையூறு தருவதாக அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் இக்கழிவுகளை நீக்குவதோடு, தொடர்ந்து இப்படி மருத்துவக்கழிவுகளை வீசிசெல்லும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-  மோகன்ராஜ்