சுற்றுச்சூழல்

காற்றுமாசால் குறை மாதத்தில் குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்

காற்றுமாசால் குறை மாதத்தில் குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்

webteam

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அதிகப்படியான காற்று மாசுபாட்டினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முதல் காலாண்டு கர்ப்ப காலத்தில் அதிகமான காற்று மாசு உள்ள இடங்களில் வசிக்கும் 83 சதவீத பெண்களுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசு காரணமாக கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு முடிவு. 3,6,9 மாதங்கள் என பல்வேறு கர்ப்ப காலங்களில் உள்ள பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

முதல் காலாண்டு கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் காற்று மாசில் இருந்து தங்கள் காத்துக்கொள்ள வேண்டும். மேலும் காற்று மாசால், பிறக்கும் குழந்தைக்கு கண்பார்வை கோளாறு, செவித்திறன் கோளாறு, குறை மாதத்தில் பிறப்பது, குறைந்த எடையில் குழந்தை பிறப்பது மற்றும் குழந்தை மரணமடையக்கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும், முதல் மற்றும் இரண்டாம் கர்ப்ப காலத்தில் காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வு முடிவை, என்விரான்மெண்டல் ஹெல்த் பெர்ஸ்பெக்டிவ்ஸ் என்ற பத்திரிக்கைவெளியிட்டுள்ளது.