சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
தீபாவளி என்றாலே வண்ணமிகு வாண வேடிக்கைகளுடனும், புகையை வெளிப்படுத்தும் வெடிமருந்துகளுடனும் கொண்டாடுவது தான் வழக்கம். இது தொடர்பாக மாசுக்கட்டுபாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது இடத்தில் வெடி வெடிப்பதால் சுற்றுப்புறம் மாசடைவதாகவும், அதனால் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடி வெடிப்பதால் ஏற்படும் புகையினால் சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் மாசுக்கட்டுபாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.