வடகிழக்குப் பருவமழை 59 ஆண்டுகளுக்குப் பிறகு தாமதமாக தொடங்கியுள்ளது.
தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் முடிவுக்கு வருவது வழக்கம் என்ற நிலையில், நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் வரை மழைப் பொழிவு நீடித்துள்ளது. இதன் எதிரொலியால் வடகிழக்குப் பருவமழைக்கான காற்று மாற்றம் அக்டோபர் 9ஆம் தேதி தாமதமாக தொடங்கியுள்ளது என இந்திய வானிலை தெரிவித்துள்ளது.
மேற்கு ராஜஸ்தானில் இருந்து தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு வர 15 நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, இத்தாண்டு அக்டோபர் 9ஆம் தேதி காலதாமதமாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.