சுற்றுச்சூழல்

நீலகிரி: கால்நடைகளைக் கடித்துக் கொல்லும் புலியை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

நீலகிரி: கால்நடைகளைக் கடித்துக் கொல்லும் புலியை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

kaleelrahman

நீலகிரி மவட்டம் கூடலூர் அருகே கால்நடைகளை தாக்கிக் கொன்று வரும் புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராம மக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமதுரை பேரூராட்சியில் அம்பலமூலா பகுதியில் ராஜூ என்பவரின் தொழுவத்தில் நுழைந்த புலி, கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றுள்ளது. இதே கொட்டகையில் 5 மாதங்களுக்கு முன் ஒரு பசுமாட்டை புலி கொன்றது.

இந்நிலையில், இப்பகுதியில் இதுவரை பத்துக்கும் அதிகமான மாடுகளை புலி கடித்துக் கொன்றதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதையடுத்து அங்கு ஆய்வு நடத்தச் சென்ற வனத் துறையினரை கிராமமக்கள் சுற்றிவளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.