யுரேனஸைச் சுற்றி மேலும் ஒரு துணைக்கோள் சுற்றி வருவதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தும் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாசா மற்றும் கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த தொலைநோக்கியை விண்ணில் செலுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. என்ன விவரம் என பார்க்கலாம்.
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST), யுரேனஸைச் சுற்றி வரும் ஒரு புதிய, அறியப்படாத துணைக்கோளை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் 28 துணைக்கோள்களை கொண்ட யுரேனசின் மொத்த துணைக்கோள்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 19 அன்று அறிவிக்கப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, பிப்ரவரி 2 அன்று நடத்தப்பட்ட வெப் கண்காணிப்பின் போது எடுக்கப்பட்ட படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
நாசா வெப் மிஷன் குழுவின் கூற்றுப்படி, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைக்கோளுக்கு தற்காலிகமாக S/2025 U1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நமது சூரிய மண்டலத்தில் அறியப்பட்ட மிகச் சிறிய துணைக்கோள்களில் ஒன்றாகும். இதன் விட்டம் சுமார் ஆறு மைல்கள் (10 கிமீ) ஆகும். அதன் சிறிய அளவு மற்றும் யுரேனஸின் வளைய அமைப்புக்கு அருகாமையில் இருப்பது, ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் நாசாவின் 1986 அதாவது 40 ஆண்டுகளுக்கு முன்பு வாயேஜர் 2 பறக்கும் விமானம் போன்ற முந்தைய பயணங்களில் இதனை கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம். குறிப்பாக யுரேனஸைக் கடந்து சென்ற வாயேஜர் 2, 11 நிலவுகளையும் இரண்டு புதிய வளையங்களையும் வெளிப்படுத்த முடிந்தது, ஆனால் இதைத் தவறவிட்டது.
இந்தக் கண்டுபிடிப்பு யுரேனஸின் மொத்த சந்திரன்களின் எண்ணிக்கையை 29 ஆக உயர்த்துகிறது. இது கிரகத்தின் சிக்கலான அமைப்பில் காணப்படும் 14வது சிறிய உள் நிலவு ஆகும். இந்த உள் செயற்கைக்கோள்கள், யுரேனஸின் ஐந்து பெரிய நிலவுகளான மிராண்டா, ஏரியல், அம்ப்ரியல், டைட்டானியா மற்றும் ஓபரான் ஆகியவற்றின் பாதைகளுக்குள் சுற்றி வருகின்றன. வேறு எந்த கிரகமும் இவ்வளவு சிறிய உள் நிலவுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை அடுத்து The International Astronomical Union அதிகாரப்பூர்வ பெயரை முடிவு செய்யும். இதுவரை, அனைத்து யுரேனிய நிலவுகளும் ஷேக்ஸ்பியர் அல்லது அலெக்சாண்டர் போப்பின் படைப்புகளிலிருந்து பெயர்களை எடுத்துள்ளன. இந்நிலையில், இதற்கு என்ன பெயர் வைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.