சுற்றுச்சூழல்

மழையில் நனைந்த குட்டியை பாதுகாக்க தாய் யானை பாசப் போராட்டம்

JustinDurai

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்த கனமழையின்போது குட்டி குட்டியை பாதுகாக்க தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை அடிக்கடி அருகில் உள்ள தேயிலை தோட்டப் பகுதிகளுக்குள் நுழைவதும், மக்கள் அவற்றை காட்டுக்குள் விரட்டுவதும் வழக்கம். இந்த சூழ்நிலையில், கூடலூரில் பெய்த கனமழையின்போது தனது குட்டியை பாதுகாக்க தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு  ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், தாய் யானை ஒன்று தன்  குட்டியை மழையிலிருந்து பாதுகாக்கிறது. கூடலூர் தேயிலைத் தோட்டத்தில் உள்ள சாலையில் தன் குட்டியுடன் யானை ஒன்று சுற்றித்திரிந்த நேரத்தில் மழை பெய்கிறது. அப்போது, மழையில் நனைந்த  குட்டியை தன்  உடலால் அரவணைத்து, மழை நீர் தன் குட்டியின் மேல் விழாமல் பாதுகாக்கிறது. ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு  பகிர்ந்துள்ள இந்த கண்கொள்ளக்காட்சியை நெட்டிசன்கள் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.