உலகில் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது
குண்டான பெண்கள் அதிகமாக உள்ள நாடுகள் குறித்த ஆய்வு ஒன்றை நியூசிலாந்தில் உள்ள ஆக்லாண்ட் பல்கலைக்கழக நடத்தியது. இதில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
அதிகப்படியான உடல் கொழுப்பு, உடல் எடை அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடமும் பிரித்தானியா இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. இரு நாடுகளிலும் உடல்பருமனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் 10 பெண்களில் 8 பேர் அதிக உடல்பருமனாக இருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இருதய நோய், நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் தாக்கும் அபாயம் குறித்த இரு நாடுகளிலும் அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இளைஞர்களில் இந்த எண்ணிக்கையானது பெண்களில் 51.4 சதவிகிதமும் ஆண்களில் 48.7 சதவிகிதம் எனவும் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கு அடுத்த படியாக அயர்லாந்து பெண்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இதனால் பெண்கள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.