சுற்றுச்சூழல்

குவைத்தில் குவிந்து கிடக்கும் கோடிக்கணக்கான சக்கரங்கள்

Veeramani

குவைத்தில் கோடிக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பயன்படாத வாகன சக்கரங்களை மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கியுள்ளது.

கிட்டதட்ட 4 கோடி சக்கரங்கள் இங்கு குவிக்கப்பட்டுள்ளதோடு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாவதாக மக்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று இந்த சக்கரங்களை மறு சுழற்சி செய்து டைல்ஸ் உள்ளிட்ட பொருட்களை உருவாக்குவதாக கூறியுள்ளது. எனவே இந்த சக்கரங்களை இங்கிருந்து அகற்றி தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பேருதவியாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.